Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் பிக்பாஸ் வீட்டில் ப்ரதீப்..? அதிர்ச்சியில் மாயா கேங்!

Advertiesment
மீண்டும் பிக்பாஸ் வீட்டில் ப்ரதீப்..? அதிர்ச்சியில் மாயா கேங்!
, வெள்ளி, 10 நவம்பர் 2023 (12:13 IST)
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட ப்ரதீப் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல வாய்ப்புகள் இருப்பதாக பேசிக் கொள்ளப்படுகிறது.



விஜய் டிவியில் பிக்பாஸ் தொடரின் 7வது சீசன் பரபரப்பாக சென்று வருகிறது. இதில் கடந்த வாரத்தில் ப்ரதீப்பை ஆபத்தான நபர், பெண்கள் பாதுகாப்பாக உணரவில்லை என்று கூறி ஹவுஸ்மேட்ஸ் ரெட் கார்டு காட்டியதால் கமல்ஹாசன் மற்றும் பிக்பாஸ் நிர்வாகம் வெளியேற்றியது.

இது ப்ரதீப்புக்கு நடந்த அநீதி என திரைப்பிரபலங்கள் பலரும், ப்ரதீப் ரசிகர்களுமே கூறி வந்தனர். இந்நிலையில் இந்த வாரம் நடந்த ஒரு டாஸ்க்கில் நிக்சன் சக போட்டியாளரான வினுஷாவின் உடலமைப்பு குறித்து வர்ணித்து பேசியிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல மாயா, ஐஷூ போன்றோரும் ப்ராவோ குறித்து ஆபாசமாக அவர் பார்ப்பதாக பேசியிருந்தனர்.

இந்த டாஸ்க் வீடியோ வெளியான நிலையில் இவர்கள் எல்லாரும் இப்படி இருக்கும்போது ப்ரதீப்பை மட்டும் குற்றம் சொன்னது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. தாங்கள் பேசிய விஷயங்கள் பொதுவுக்கு வந்துவிட்டது மாயா கேங்கையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள ப்ரதீப் தான் மீண்டும் பிக்பாஸ் வீட்டில் சேர்த்துக் கொள்ளப்பட்டால் விளையாட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை போக்கி அவர் அவரை நிரூபிக்க முயல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ப்ரதீப் மீண்டும் பிக்பாஸ் வீட்டில் அனுமதிக்கப்படுவாரா? அப்படி உள்ளே சென்றால் மாயா கேங் நிலைமை என்னவாகும்? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“ஜிகர்தண்டா 2” படத்தில் நடிப்பில் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார் ராகவா லாரன்ஸ் - நடிகர் தனுஷ் பாராட்டு !