Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிராகன் படத்தில் இரண்டு நாள் கலெக்‌ஷன் இத்தனைக் கோடியா?... ஆச்சர்யப்பட வைக்கும் வசூல்!

vinoth
ஞாயிறு, 23 பிப்ரவரி 2025 (15:47 IST)
விஜய்யின் GOAT படத்துக்குப் பிறகு ஏஜிஎஸ் புரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பாக பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கியுள்ள டிராகன் படம் கடந்த 21 ஆம் தேதி ரிலீஸாகி பெருவாரியான வரவேற்பைப் பெற்று வருகிறது. படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கடாயு லோஹர் மற்றும் மிஷ்கின் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் படம் மிகப்பெரிய அளவில் வசூலிக்கும் என இப்போதே கருத்துகள் எழ ஆரம்பித்துள்ளன. லவ் டுடே வெற்றியை அதிர்ஷ்டத்தின் மூலம் கிடைத்த வெற்றி அல்ல என்று ப்ரதீப் ரங்கநாதன் மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் காட்டியுள்ளார். படத்தின் டிரைலரைப் பார்த்துவிட்டு சென்ற ரசிகர்களுக்கு பல சர்ப்ரைஸ்கள் இயக்குனர் வைத்திருந்ததாக ரசிகர்கள் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வெள்ளி மற்றும் சனி ஆகிய இரு நாட்களில் மட்டும் டிராகன் திரைப்படம் சுமார் 25 கோடி ரூபாய்க்கு மேல் உலகளவில் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லவ் டுடே படம் போல இந்த படமும் 100 கோடி ரூபாய் வசூல் செய்யும் என திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதிதி ஷங்கரின் அழகிய க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல் ஆல்பம்!

கமலுக்கே ‘தக்லைஃப்’ படத்தை போட்டு காண்பிக்கவில்லை.. அடித்துவிடும் பொய்யர்கள்..!

சந்தன நிற உடையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் சமந்தா!

வாடிவாசலுக்குப் பிறகு ஆவேஷம் இயக்குனரின் இயக்கத்தில் சூர்யா..!

பட்டங்களை வாங்கி குவிக்கும் நட்சத்திரங்களின் வாரிசுகள்.. சூர்யா, தனுஷை அடுத்து சிம்ரன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments