விஜய்க்காக எழுதிய கதையில் தானே கதாநாயகனாக நடிக்கும் ப்ரதீப் ரங்கநாதன்!

vinoth
புதன், 11 ஜூன் 2025 (08:48 IST)
கோமாளி படத்தின் மூலம் தன்னை ஒரு வணிக இயக்குனராக நிலைநிறுத்திக் கொண்ட ப்ரதீப் ரங்கநாதன் அடுத்து இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் திரையரங்கு மூலமாகவே 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின.

அதன் பின்னர் அவர் நடித்த ‘டிராகன்’ திரைப்படமும் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டாகி 150 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. இதையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIK படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படம் செப்டம்பர் மாதத்தில் ரிலீஸாகவுள்ளது. அதன் பின்னர் தீபாவளிக்கு அவர் நடிக்கும் ‘Dude’ படம் ரிலீஸாகவுள்ளது.

இதையடுத்து மீண்டும் தானே கதாநாயகனாக நடித்து ஒரு படத்தை இயக்கவுள்ளாராம் ப்ரதீப். அறிவியல் புனைகதை ஜானரில் இந்த படம் உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு ப்ரதீப் அளித்த ஒரு நேர்காணலில் விஜய்யை சந்தித்து அவருக்காக தான் உருவாக்கிய அறிவியல் புனைகதை ஒன்றை சொன்னதாக ப்ரதீப் தெரிவித்திருந்தார். தற்போது அந்த கதையைதான் சில மாற்றங்கள் செய்து ப்ரதீப் இயக்கி நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த இரு படங்களின் காப்பியா ‘ட்யூட்’… இணையத்தில் வைரலாகும் ட்ரால்கள்!

அய்யய்யோ அவரா? பயங்கரமான ஆளாச்சே? பிக்பாஸ் வீட்டில் களைக்கட்டும் வைல்ட்கார்ட் போட்டியாளர்கள்!

அயலான் இயக்குனரின் இயக்கத்தில் சூரி… தயாரிக்கும் முன்னணி நிறுவனம்!

’மாரி நீதான் அந்த பைசன்..’ – படம் பார்த்துப் பாராட்டிய மணிரத்னம்!

கமல் பிறந்தநாளில் வெளியாகும் ரஜினி பட அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments