பிரபுதேவா ஏ ஆர் ரஹ்மான் இணையும் படத்தின் ஷூட்டிங் தொடக்கம்!

vinoth
வெள்ளி, 3 மே 2024 (07:52 IST)
தமிழ் சினிமாவின் வெற்றிக் கூட்டணிகளில் ஒன்று பிரபுதேவா ஏ ஆர் ரஹ்மான் கூட்டணி. இவர்கள் கூட்டணியில் உருவான காதலன், லவ் பேர்ட்ஸ், மிஸ்டர் ரோமியோ, மின்சாரக் கனவு உள்ளிட்ட படங்களின் பாடல்கள் மிகப்பெரிய கல்ட் கிளாசிக் பாடல்களாக இன்றளவும் கொண்டாடப்படுகின்றன. ஜெண்டில்மேன் படத்தில் சிக்கு புக்கு ரயிலே பாடலுக்கு பிரபுதேவா நடனம் ஆடியிருந்தார்.

இருவரும் கடைசியாக 1999 ஆம் ஆண்டு வெளியான மின்சாரக் கனவு படத்தில் இணைந்து பணியாற்றி இருந்தனர். அதன் பிறகு 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கூட்டணி இப்போது ஆறாவது முறையாக இணைய உள்ளது. அதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

இந்த படத்தை பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனத்தின் சி ஈ ஓ மனோஜ் என் எஸ் இயக்குகிறார். இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் டைட்டில் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரு பாட்டுதான் ரிலீஸ் ஆச்சு! அடுத்த படத்திலும் அதே ஹீரோயினை லாக் செய்த சிவகார்த்திகேயன்

சேலையில் ஜொலிக்கும் க்ரீத்தி … அழகிய புகைப்படத் தொகுப்பு!

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் அசத்தும் ராஷி கண்ணா!

மாஸ்க் படத்துக்கு இன்னும் ஜி வி க்கு சம்பளம் தரவில்லை… வெற்றிமாறன் பகிர்ந்த தகவல்!

இயக்குனர் பாரதி கண்ணனை மிரட்டினார்களா கார்த்திக்கின் ரசிகர்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments