Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குக் வித் கோமாளி அஸ்வினுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு… முன்னணி இயக்குனர் இயக்கத்தில் புதிய படம்!

Webdunia
சனி, 18 செப்டம்பர் 2021 (10:26 IST)
இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் அஸ்வின் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இயக்குனர் பிரபு சாலமன் தமிழில் மைனா, கும்கி போன்ற படங்களின் தனக்கான முத்திரையைப் பதித்து முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனால் அவரின் கடைசி சில படங்கள் தோல்வி அடைந்து அவரை கடனாளி ஆக்கின. இந்நிலையில் அவரின் மகன் சஞ்சய்யை கதாநாயகனாக அறிமுகப்படுத்தும் விதமாக ஒரு படத்தை இயக்க உள்ளாராம். இந்த படத்துக்கான ஆரம்பக் கட்ட வேலைகள் நடந்து வருகின்றன.

மேலும் மற்றொரு படத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக பிரபலமான நடிகர் அஸ்வினைக் கதாநாயகனாக்கி ஒரு புதிய படத்தை இயக்க உள்ளாராம். இந்த படத்தின் மூலம் பிரபு சாலமன் மீண்டும் தன் ஆஸ்தான இசையமப்பாளரான இமானோடு இணைய உள்ளதாக சொல்லப்படுகிறது.

மைனா, கும்கி போன்ற வெற்றி படங்களைக் கொடுத்த பிரபு சாலமன் சமீபகாலமாக தோல்வி படங்களாகக் கொடுத்து வருவதால் அவருக்கும் ஒரு கம்பேக் தேவைப் படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments