Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபு சாலமன் & CWC அஸ்வின் இணையும் புது படம்… தலைப்பு & ஃபர்ஸ்ட்லுக் பற்றி வெளியான தகவல்!

Webdunia
புதன், 18 மே 2022 (14:59 IST)
இயக்குனர் பிரபு சாலமன் தமிழில் மைனா, கும்கி போன்ற படங்களின் தனக்கான முத்திரையைப் பதித்து முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனால் அவரின் கடைசி சில படங்கள் தோல்வி அடைந்து அவரை கடனாளி ஆக்கின. இந்நிலையில் அவரின் மகன் சஞ்சய்யை கதாநாயகனாக அறிமுகப்படுத்தும் விதமாக ஒரு படத்தை இயக்க உள்ளாராம். இந்த படத்துக்கான ஆரம்பக் கட்ட வேலைகள் நடந்து வருகின்றன.

மேலும் மற்றொரு படத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக பிரபலமான நடிகர் அஸ்வினைக் கதாநாயகனாக்கி ஒரு புதிய படத்தை இயக்கி வந்தார். பிரபுசாலமனின் மற்ற படங்களைப் போல இந்த படமும் காடு சார்ந்த கதைக்களத்தைக் கொண்டதுதானாம். முழுக்க முழுக்க ஒரு பேருந்தில் நடக்கும் கதை என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் முழுப் படத்தையும் முடித்துள்ளனர். விரைவில் படத்தின் ரிலீஸ் திட்டமிடப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு வரும் மே 20 ஆம் தேதி அறிவிக்கப்படும் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments