Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குனர் பிரபு சாலமனின் கும்கி 2 ஷூட்டிங் நிறைவு!

Webdunia
செவ்வாய், 2 ஜூலை 2024 (07:34 IST)
இயக்குனர் பிரபு சாலமன் தமிழில் மைனா, கும்கி போன்ற படங்களின் தனக்கான முத்திரையைப் பதித்து முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனால் அவரின் கடைசி சில படங்கள் தோல்வி அடைந்து அவரை புகழ் வெளிச்சத்தில் இருந்து மறைய வைத்தன. கடைசியாக அவர் இயக்கிய செம்பி திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் இப்போது அவர் மீண்டும் தன்னுடைய ஹிட் படமான கும்கி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படமும் யானைகளைப் பற்றிய படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்தபடத்தின் ஒளிப்பதிவாளர் சுகுமார் படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படங்களை வெளியிட்டு படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக அறிவித்துள்ளார்.

மேலும் பின்தயாரிப்பு வேலைகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்றும் அறிவித்துள்ளார். முதல் பாகத்தைத் தயாரித்த திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமே இந்த பாகத்தையும்  தயாரிப்பதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் போலவே பெட்டியை தூக்கிட்டு கிளம்பும் ராஷ்மிகா மந்தனா.. தனுஷ் படத்தின் அப்டேட்..!

63 வயது பிரபல நடிகரின் மனைவியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரல் புகைப்படம்..!

ஹோம்லி ட்ரஸ்ஸில் ரைசா வில்சனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

கருப்பு நிற ட்ரஸ்ஸில் காஜல் அகர்வாலின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி இல்லாமல் வெளியாகும் போஸ்டர்கள்… இதுதான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments