Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குலேபகாவலி - காமெடி பட்டாளத்துடன் களமிறங்கும் பிரபுதேவா

Webdunia
புதன், 3 மே 2017 (15:12 IST)
பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தில், ஏகப்பட்ட காமெடி நடிகர்களுடன் இணைந்து நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


 

 
எஸ்.கல்யாண் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் படம் ‘குலேபகாவலி’. ‘எங்கேயும் காதல்’ படத்தின் மூலம் பிரபுதேவாவால் அறிமுகப்படுத்தப்பட்ட ஹன்சிகா, இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், சத்யன், ஆனந்த்ராஜ், முனீஸ்காந்த், யோகிபாபு என ஏகப்பட்ட காமெடி நடிகர்கள் நடிக்கின்றனர். அப்படியானால், இது முழுநீள காமெடிப்படம் எனத் தெரிகிறது.
 
டி.ஆர்.ராஜகுமாரி, ராஜ சுலோச்சனா, வரலட்சுமி உள்ளிட்ட பல நடிகைகளுடன் எம்.ஜி.ஆர். நடித்த படம் ‘குலேபகாவலி’. 1955ஆம் ஆண்டு இந்தப் படம் வெளியானது. டி.ஆர்.ராஜகுமாரி பல படங்களைத் தயாரித்து தொடர்ச்சியாக நஷ்டம் அடைந்து பொருளாதார சிக்கலில் இருந்தபோது, அவருக்கு உதவுவதற்காக எம்.ஜி.ஆர். நடித்துக் கொடுத்த படம் இது.

விஜய்யுடன் கடைசியாக நடிக்க போகும் நடிகை யார் தெரியுமா?

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

சினிமாவை விட்டு விலகிவிடுவேன்… கங்கனா தடாலடி பதில்!

திரையுலகம் பொய்யானது, போலியானது.. விலக போகிறேன்.. கங்கனா ரனாவத் அதிரடி பேட்டி..!

விடுதலை 2 படத்தில் இணைந்த பிரபல தமிழ் ஹீரோ!

அடுத்த கட்டுரையில்
Show comments