Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்பா – மகனாக நடிக்கும் விக்ரம்?

Webdunia
புதன், 3 மே 2017 (15:01 IST)
விக்ரம் நடிக்க இருக்கும் புதிய படத்தில், அப்பா – மகன் என இரு வேடங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

 
 
2003ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில், விக்ரம், த்ரிஷா, விவேக், கோட்டா சீனிவாச ராவ், ரமேஷ் கண்ணா, விஜயகுமார் நடித்த  படம் ‘சாமி’. விக்ரம் போலீஸாக நடித்திருக்கும் இந்தப் படம், சூப்பர் ஹிட். அப்போதைய மதிப்புக்கு 5 கோடி ரூபாய்  செலவில் எடுக்கப்பட்ட படம், 31 கோடி ரூபாயை வசூலித்தது. 
 
14 வருடங்கள் கழித்து அதன் இரண்டாம் பாகத்தை எடுக்கப் போகிறார் ஹரி. விக்ரம், த்ரிஷாவே இந்தப் பாகத்திலும் நடிக்க,  கூடுதலாக கீர்த்தி சுரேஷும் இணைந்துள்ளார். முதல் பாகத்தில் விக்ரமுக்கும், த்ரிஷாவுக்கும் திருமணம் ஆகிவிட்டது. இந்தப்  படம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக அமைவதால், விக்ரமுடன் கீர்த்தி சுரேஷைச் சேர்த்துவைக்க முடியாது. 
 
விக்ரமை ஒருதலையாக கீர்த்தி சுரேஷ் காதலிக்கிறார் என்றால் கூட, அதையும் ‘சிங்கம்-2’, ‘சிங்கம்-3’யின் பயன்படுத்தி  விட்டார் ஹரி. எனவே, அப்பா – மகனாக விக்ரம் நடிக்கலாம் என்கிறார்கள். முதல் பாதியில் அப்பா விக்ரம் – த்ரிஷா  காட்சிகளும், இரண்டாம் பாதியில் மகன் விக்ரம் – கீர்த்தி சுரேஷ் காட்சிகளும் இருக்கலாம் என்கிறார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜி வி பிரகாஷின் இடிமுழக்கம் படத்தின் ரிலீஸ் எப்போது?... வெளியான தகவல்!

இளையராஜா எதிர்பார்ப்பது பணம் அல்ல… இயக்குனர் சி எஸ் அமுதன் ஆதங்கம்!

ஆறாவது நாளில் குறைந்த அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ வசூல்!

குட் பேட் அக்லி பெரிய வசூல் பண்ணாலும் தயாரிப்பாளருக்கு நஷ்டம்தான் – பிரபலம் கருத்து!

விஜய் சேதுபதியின் அடுத்த பட நாயகி தபு அல்ல, கபாலி நாயகி தான்.. சூப்பர் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments