Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாடலாசிரியராக மாறிய பிரபல நடிகர்

Webdunia
வியாழன், 22 நவம்பர் 2018 (18:14 IST)
கடந்த 2002ஆம் ஆண்டு ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா, பிரபு இணைந்து நடித்த வெற்றிப்படம் 'சார்லி சாப்ளின்'. இந்த படத்தின் இரண்டாம் பாகம் 16 ஆண்டுகள் கழித்து தற்போது உருவாகி வருகிறது. முதல் பாகத்தில் நடித்த பிரபுதேவா, பிரபு மீண்டும் நடிக்க, ஷக்தி சிதம்பரம் இந்த படத்தையும் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒருசில வாரங்களில் நிறைவடையவுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் நடிகர் பிரபுதேவா பாடலாசிரியர் என்ற புது அவதாரத்தை எடுத்துள்ளார். அவர் எழுதிய ' 'இவளா இவளா ரொம்ப பிடிச்சிருக்கு' என்ற பாடல் நாளை சிங்கிள் பாடலாக வெளியாகவுள்ளது., இந்த பாடலை வெளியிடுவது யார் என்பது குறித்த அறிவிப்பு இன்று இரவு 7 மணிக்கு வெளியாகவுள்ளது.

ஏற்கனவே நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் போன்ற அவதாரங்களில் கோலிவுட், டோலிட், பாலிவுட் என ஜொலித்த பிரபுதேவா எழுதிய முதல் பாடலை வரவேற்க அவரது ரசிகர்கள் தயாராக உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யா படத்தில் நடிக்க மறுத்த கீர்த்தி சுரேஷ்.. காரணம் விஜய்யா?

’லால் சலாம்’ படக்குழு போலவே ஹார்ட் டிஸ்க்கை தொலைத்த ‘கண்ணப்பா’ படக்குழு.. அதிர்ச்சி தகவல்..!

யாஷிகா ஆனந்தின் கிளாமர் லுக் கிளிக்ஸ்!

வெண்ணிற சேலையில் அழகுப் பதுமையாய் ஜொலிக்கும் நிதி அகர்வால்!

‘சூர்யா 46’ படத்துக்கு ரிலீஸ் தேதி குறித்த படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments