Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னைப் பார்த்ததும் தெருவிலேயே ஆட ஆரம்பித்த பிச்சைக்காரர்… நெகிழ்ச்சி சம்பவத்தைப் பகிர்ந்த பிரபுதேவா!

vinoth
புதன், 15 ஜனவரி 2025 (13:37 IST)
தமிழ் சினிமாவில் நடன அமைப்பாளராக இருந்து, ஹீரோவாக  பல படங்களில் நடித்த பின்னர் போக்கிரி படம் மூலம் வெற்றிகரமான இயக்குநராக வலம் வந்தவர் பிரபுதேவா. இவர் பாலிவுட் சென்று அங்கும் வெற்றிகரமான இயக்குநராக வலம் வந்தார். ஆனால், அவரது சமீபத்தைய படங்கள் எதுவும் வெற்றிபெறவில்லை.

அதனால் அவர் மீண்டும் நடிப்பு பாதைக்குத் திரும்பியுள்ளார். இதையடுத்து தமிழ் சினிமாவில் தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்து வந்தார். ஆனால் அதில் எந்த படங்களும் பெரிதாக அவருக்கு திருப்புமுனையாக அமையவில்லை. இதனால் அவர் நடிப்பில் ஒரு இடைவெளி எடுத்துக்கொண்டார். சமீபத்தில் அவர் நடிப்பில் ரிலீஸான ஜாலியோ ஜிம்கானா படம் வந்த தடம் கூட தெரியாமல் போனது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர் “மும்பையில் நான் என்னுடைய நண்பர்  ஒருவரோடு காரில் சென்றுகொண்டிருந்தேன். அப்போது ஒரு பிச்சைக்காரர் என்னிடம் பிச்சைக் கேட்க வந்தார். என்னை அடையாளம் கண்டதும் கையில் இருந்த பொருட்களை எல்லாம் கீழே போட்டுவிட்டு  ஆட ஆரம்பித்துவிட்டார். இந்த சம்பவத்தை என்னால் எப்போதும் மறக்கமுடியாது” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்னைப் பார்த்ததும் தெருவிலேயே ஆட ஆரம்பித்த பிச்சைக்காரர்… நெகிழ்ச்சி சம்பவத்தைப் பகிர்ந்த பிரபுதேவா!

வெற்றிமாறன் - சூர்யாவின் ‘வாடிவாசல்’.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெறும் ‘காதலிக்க நேரமில்லை’… முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

‘மாற்றுத் திறனாளிகள் மேல் பெருங்கருணை கொள்கிறேன் என்கிற போர்வையில்…’ -வணங்கான் படத்தை விமர்சித்த லெனின் பாரதி!

கும்பமேளாவில் நடக்கவுள்ள பாலையாவின் ‘அகாண்டா 2’ படப்பிடிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments