தில்லுக்கு துட்டு டைப் காமெடி ஹாரர் படமாக பிரபாஸின் ‘தி ராஜா சாப்’… டிரைலர் எப்படி?

vinoth
செவ்வாய், 30 செப்டம்பர் 2025 (10:28 IST)
பேன் இந்தியா ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படங்களில் ஒன்று ‘தி ராஜாசாப். இந்த படத்தை இயக்குனர் மாருதி இயக்க பீப்பிள்ஸ் மீடியா நிறுவனம் தயாரித்து வருகிறது.  தமன் இசையமைக்கிறார். நிதி அகர்வால், மாளவிகா மோகனன், VTV கணேஷ், சஞ்சய் தத் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு பிரபாஸ் நடிப்பில் ஒரு காமெடி ஹாரர் த்ரில்லர் படமாக ராஜாசாப் உருவாகி வருகிறது.. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கப்பட்டாலும், பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டதால் இன்னும் முழுமையாக படப்பிடிப்பு நிறைவடையாத காரணத்தால் பல முறை ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. கலகலப்பான ஒரு காமெடி பேய்ப் படமாக இந்த படம் இருக்கும் என்பதை டிரைலர் காட்டுகிறது. வழக்கமான தெலுங்கு மசாலா படமாக கதாநாயகிகளின் கவர்ச்சி தரிசனம், பன்ச் லைன் காமெடி என வசீகரித்தாலும், படத்தில் கிராபிக்ஸ் தரம் மிகவும் சுமாராக இருப்பதுதான் ரசிகர்களுக்கு அதிர்ச்சியான ஒன்றாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக் பாஸ் 9: மூன்றாவது வார எலிமினேஷன் பட்டியலில் 9 பேர்!

மாடர்ன் உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

ஜொலிக்கும் விளக்கு வெளிச்சத்தில் மேலும் ஜொலிக்கும் ரகுல் ப்ரீத் சிங்!

பாதி ஷூட்டிங் முடிந்த பின்னர் திரைக்கதையை மாற்றும் பிரசாந்த் நீல்.. பின்னணி என்ன?

என் தயாரிப்பாளர்கள் ப்ளூ சட்ட மாறனைவிடக் கண்டிப்பானவர்கள்… கருப்பு படம் குறித்து ஆர் ஜே பாலாஜி அப்டேட்!

அடுத்த கட்டுரையில்