ஸ்பெயின் கார் ரேஸ் வெற்ற் மகிழ்ச்சி… அடுத்த படம் பற்றி பேசிய அஜித்..!

vinoth
செவ்வாய், 30 செப்டம்பர் 2025 (08:51 IST)
தன்னுடைய ‘குட் பேட் அக்லி’ படம் அடைந்த மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு அஜித்குமார் கடந்த சில மாதங்களாக கார் பந்தயங்களில் ஆர்வமாகக் கலந்துகொண்டு வருகிறார். இனிமேல் வருடத்துக்கு ஒரு படம், மீத நேரத்தில் கார் ரேஸ் பந்தயங்கள் என திட்டம் வகுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆண்டுக்கு ஒரு படம் மற்ற நாட்களில் கார் பந்தயம் என அவர் முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் அஜித்குமார் ரேஸிங் என்ற அணியை உருவாக்கியுள்ளார். அதில் சமீபத்தில் தமிழகத்தின் ரேஸர் நரேன் கார்த்திகேயனும் இணைந்தார். தொடர்ந்து துபாய், ஜெர்மனி போன்ற நாடுகளில் பந்தயங்களில் கலந்துகொண்ட அஜித்குமார் அணி அடுத்து ஸ்பெயினில் நடந்த கார் ரேஸில் கலந்துகொண்டு மூன்றாம் இடத்தையும் பிடித்தது.

அந்த வெற்றி மகிழ்ச்சியில் இருந்த அஜித் ஒரு நேர்காணல் அளித்த போது தன்னுடைய அடுத்த படம் பற்றியும் பேசியுள்ளார். அதில் “AK 64 படத்துக்கானக் கதை தற்போது உருவாகி வருகிறது. விரைவில் அது குறித்த அறிவிப்பு வெளியாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘லால் சலாம்’… தாதா சாகேப் விருது வென்ற மோகன்லாலுக்கு கேரள அரசு பாராட்டு விழா!

கரூர் துயர சம்பவம்… சென்னையில் நடக்க இருந்த ப்ரமோஷன் நிகழ்ச்சி ரத்து!

வித்தியாசமான உடையில் அழகுப் பதுமையாய் ஜொலிக்கும் ஷிவானி!

வெண்ணிற உடையில் கவர்ச்சிப் பதுமையாய் போஸ் கொடுத்த ஜான்வி!

’காந்தாரா 1’ ஷூட்டிங்கின் அனைத்து நாட்களிலும் சைவ உணவு… படக்குழு செய்த செயல்!

அடுத்த கட்டுரையில்
Show comments