அவதார் படத்தால் பிரபாஸ் படத்துக்கு வந்த சிக்கல்!

vinoth
வெள்ளி, 12 செப்டம்பர் 2025 (10:22 IST)
பேன் இந்தியா ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் கடைசியாக ரிலீஸான கல்கி திரைப்படம் கடந்த ஆண்டு  ஜூன் மாதம் ரிலீஸாகி 1100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனைப் படைத்தது.. இந்த படத்துக்குப் பிறகு  தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனரான மாருதியுடன் ’ராஜாசாப்’ படத்துக்காக இணைந்துள்ளார் பிரபாஸ். பீப்பிள் மீடியா பேக்டரி என்ற நிறுவனம் இந்த படத்தைத் தயாரிக்க, தமன் இசையமைக்கிறார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு பிரபாஸ் நடிப்பில் ஒரு காமெடி ஹாரர் த்ரில்லர் படமாக ராஜாசாப் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நிதி அகர்வால் மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கப்பட்டாலும், இன்னும் சில காட்சிகள் படமாக்கப்படாததால் ரிலிஸ் தாமதமாகிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் கடைசியாக டிசம்பர் 5 ஆம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால் அதே நாளில் அவதார் திரைப்படத்தின் மூன்றாம் பாகம் உலகம் முழுவதும் ரிலீஸாவதால் ஜனவரி மாதம் சங்கராந்தியை முன்னிட்டு ராஜசாப் ரிலீஸ் தள்ளிவைக்கலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திவ்யபாரதியின் க்யூட் & ஹாட் புகைப்படத் தொகுப்பு!

சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பாலிவுட் அரசியலால் இரண்டு வருடங்களை பாசில் இழந்தார்… அனுராக் காஷ்யப் வேதனை!

வெற்றிமாறன் என்னைப் பாராட்டவே மாட்டார்… ஆனால் அந்த படம் பார்த்துவிட்டு … ஆண்ட்ரியா பகிர்ந்த தகவல்!

மோனிகா பாடலைக் கிண்டலடித்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments