Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், நாக் அஸ்வின், வைஜயந்தி மூவீஸின் கல்கி 2898 AD திரைப்படம் 1000 கோடி வசூலைக் கடந்து வரலாறு படைத்துள்ளது!!

J.Durai
திங்கள், 15 ஜூலை 2024 (15:32 IST)
பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான  கல்கி 2898 AD திரைப்படம், வெளியாகி மூன்றாவது வாரத்திலும், ரசிகர்களின் பேராதரவைப் பெற்று வருகிறது. 
 
நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் வசூலில் 1000 கோடி ரூபாய் எனும்  மைல்கல்லை எட்டியுள்ளது.
 
பாகுபலி 2க்குப் பிறகு பிரபாஸ், தற்போது ரூ. 1000 கோடி கிளப்பில் இரண்டாவது முறையாக  இணைந்துள்ளார். கல்கி 2898 AD உண்மையில் தென்னிந்தியத் திரைப்படங்களில் பாகுபலி 2 படத்திற்குப் பிறகு, இந்த சாதனையை படைத்துள்ளது.  இப்படம் தெலுங்கு மாநிலங்களில் இன்னும் பெரும் வரவேற்புடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும்  ஹிந்தி திரையுலகிலும் மற்றும் பிற மொழிகளிலும் இப்படம் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
 
இந்த திரைப்படம் வட அமெரிக்காவில் $17 மில்லியனைத் தாண்டியுள்ளது மேலும் இந்த பிராந்தியத்தில் பாகுபலி 2 படத்திற்கு அடுத்து  இந்த சாதனையைச் செய்துள்ளது. கல்கி 2898 AD யுகே, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜெர்மனி மற்றும் இன்னும் சில நாடுகளிலும் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. 
 
வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில், ஒரு உலகத் தரத்தில், மிகச்சிறந்த தொழில்நுட்ப அம்சங்களுடன்,  மாயாஜால காட்சிகளும் முற்றிலும் புதிய களத்தில் வெளியான இப்படம்  பார்வையாளர்களுக்கு  மறக்கமுடியாத அனுபவத்தைத் தந்தது. ஹீரோ பிரபாஸ், இயக்குனர் நாக் அஸ்வின் மற்றும் மற்ற குழு உறுப்பினர்கள் அனைவரையும் ரசிகர்களும் சினிமா ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆங்கிலத்திலும் வெளியாகிறதா ‘விடாமுயற்சி’..லைகா செய்த தரமான செயல்..!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments