பவர் ஸ்டாரின் இயக்கத்தில் "பவர் லட்டு"ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

J.Durai
சனி, 12 அக்டோபர் 2024 (09:49 IST)
லட்டுவை வைத்து சமீப காலமாக பல பிரச்சனைகள் கிளம்பிய வண்ணம் உள்ளது. 2013 ல் கண்ணா லட்டு திங்க ஆசையா என கேட்ட பவர் ஸ்டார் தற்போது ஒரு புது விதமான லட்டு ஒன்றை தனது ரசிகர்களுக்காக விருந்தளிக்க உள்ளார். 
 
பவர் ஸ்டார் இயக்கத்தில் உருவாக உள்ள புது படத்தின் பெயர் "பவர் லட்டு" என பெயர் வைத்துள்ளார். இந்த படத்தை மாபெரும் பொருட்செலவில் L V Creations சார்பில் டாக்டர் லோகு தயாரிக்கின்றார், இவர் இதற்க்கு முன்னதாக பவர் ஸ்டார் நடித்த   "முன்தினம்" தயாரித்து இயக்கிய அத்திரைப்படம் மிக விரைவில்  வெளிவர உள்ளது.
 
இப்படத்திற்கு கதை திரைக்கதை எழுதியது மனோஜ் கார்த்திக் காமராஜு இவர் வைஜெயந்தி ஐ பி எஸ் , ப்ருஸ்ட்லீ ரிடர்ன்ஸ் படங்களின் இயக்குனர் ஆவார் மற்றும் வினோத் குமார் ஒளிப்பதிவு மேற்கொள்ள வசந்த் மோகன்ராஜ் இசையமைக்கின்றார். அது மட்டுமின்றி இந்த படத்தை 2S Entertainment சார்பில் எஸ் வினோத் குமார் அவர்கள் வெளியிட உள்ளார். 
 
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை தமிழ் திரைப்பட நகைச்சுவை ஜாம்பவான்களின் ஒருவரான நகைச்சுவை தென்றல் செந்தில் அவர்கள் வெளியிட பவர் ஸ்டாரும் தயாரிப்பாளரும் பெற்று கொண்டனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இனிமே என் எதிரி நீங்கதான்! புதுசா வந்த 4 பேரை டார்கெட் செய்த பாரு! தாக்குப்பிடிப்பார்களா ஹவுஸ்மேட்ஸ்!

ஓடிடி ரிலீஸூக்குப் பின் அதிகம் ட்ரால் ஆகும் தனுஷின் ‘இட்லி கடை’!

நாகார்ஜுனாவின் நூறாவது படத்தில் இணைந்த மற்றொரு ஹீரோயின்!

தமிழ்ப் படங்களில் நானா நடிக்க மாட்டேன் என்று சொன்னேன்?... இலியானா எதிர் கேள்வி!

ரஜினியுடன் மோதும் எஸ் ஜே சூர்யா… கோவாவில் முழுவீச்சில் ஜெயிலர் 2 ஷூட்டிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments