இயக்குனராக தனுஷின் முதல் படம், பவர் பாண்டியின் பாடல்கள் வெளியீட்டு தேதியை தனுஷ் அறிவித்துள்ளார்.
நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என்று பல்வேறு அவதாரங்களுடன் இருந்த தனுஷின் முதல் இயக்குனர் அவதாரம், பவர் பாண்டி. சண்டைக் கலைஞரின் வாழ்க்கையைச் சொல்லும் இந்தப் படத்தில் ராஜ்கிரண் நாயகனாக நடிக்க, பிரச்சனா, மடோனா, சாயாசிங் உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசை.
ஏப்ரல் 14 படத்தை வெளியிடுவதாக ஏற்கனவே அறிவித்திருந்த தனுஷ், மார்ச் 9 படத்தின் பாடல்களை வெளியிடுவதாக அறிவித்துள்ளார்.