Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன் ஜாமின் கோரி நடிகர் மன்சூர் அலிகான் மனு மீதான உத்தரவு ஒத்திவைப்பு!

Webdunia
வெள்ளி, 24 நவம்பர் 2023 (13:00 IST)
நடிகை திரிஷா பற்றி சர்சைக்குரிய வகையில் பேசியதாக  பதிவு செய்யப்பட்ட  முன்ஜாமீன் கோரி நடிகர் வழக்கில் மன்சூர் அலிகான் மனு மீதான உத்தரவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நடிகை திரிஷா பற்றி நடிகர் மன்சூர் அலிகான்  பேசியது சர்ச்சையாகியுள்ள நிலையில், இதற்கு  நடிகை திரிஷா, லோகேஷ் கனகராஜ், குஷ்பு, தென்னிந்திய நடிகர் சங்கம் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்த நிலையில்,   நடிகர் மன்சூர் அலிகான் ஆபாச பேச்சு விவகாரத்தில் நடிகை திரிஷா புகார் குறித்து   மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளில் நுங்கம்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தது.

வழக்குப் பதிவு செய்யுமாறு தேசிய மகளிர் ஆணையம் அறிவுறுத்திய நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த  நிலையில், திரிஷா பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக் கூறிய விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் விசாரணைக்கு ஆஜராகுமாறு சென்னை காவல்துறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும்,  நேரடியாக அழைத்து விசாரிக்க  அவருக்கு 41 ஏ எனப்படும் நோட்டீஸை அனுப்பினர்.

இந்த விவகாரத்தில்  சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள திரிஷா வீட்டிற்குச் சென்ற போலீஸார், திரிஷாவிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில்,  நடிகை திரிஷா பற்றி சர்சைக்குரிய வகையில் பேசியதாக  பதிவு செய்யப்பட்ட  முன்ஜாமீன் கோரி நடிகர் வழக்கில் மன்சூர் அலிகான் மனு மீதான உத்தரவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதில், மன்சூர் அலிகான் தரப்பில், திரிஷா சார்பில் எந்தப் புகாரில் அளிக்கப்படாத நிலையில் தேசிய மகளிர் ஆணையத்தின்  பரிந்துரையின் அடிப்படையிலேயே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.

இந்த விவகாரத்தில் நடிகர் மன்சுர் அலிகான், நடிகை திரிஷாவிடம் மன்னிப்புக் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

சூர்யா ஜோதிகா நடித்த ‘ஜில்லுனு ஒரு காதல்’ படத்தின் இரண்டாம் பாகம்… ஹீரோவாக கவின்?

கருடன் வெற்றியால் சூடுபிடிக்கும் லெஜண்ட் சரவணனின் அடுத்த படம்… ஷூட்டிங் எப்போது?

விஜய் ஆண்டனி நடிக்க இருந்த கதையில் விஜய் சேதுபதி..!

“ஓடிடி என்பது நூலகம் போன்றது… அதனால் தியேட்டர் பாதிக்கப்படாது” – மாரி செல்வராஜ் பதில்!

ஹன்சிகா நடிக்கும் காந்தாரி படத்தின் ரிலீஸ் எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments