Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போர் தொழில் படத்தின் லாபம் இத்தனை கோடியா?

போர் தொழில் படத்தின் லாபம் இத்தனை கோடியா?
, வியாழன், 3 ஆகஸ்ட் 2023 (08:02 IST)
நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து விக்னேஷ் ராஜா இயக்கிய திரைப்படம் போர்த் தொழில். ஜூன் 9 ஆம் தேதி ரிலீஸ் ஆன இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களைக் குவித்து நல்ல வசூலை ஈட்டியுள்ளது.

இந்த ஆண்டு வெளியான படங்களில் நல்ல வசூலை ஈட்டி வெற்றி பெற்ற திரைப்படங்களில் போர் தொழில் படமும் ஒன்று. போர் தொழில் திரைப்படம் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. போர் தொழில் திரைப்படம் ஓடிடியில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் மூலமாக தயாரிப்பாளர்களுக்கு 30 கோடி ரூபாய் அளவுக்கு லாபம் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த தயாரிப்பாளர்கள் அடுத்து புதிதாக ஒரு வெப் சீரிஸை தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயிலர் படத்துக்கு தமிழ் நாட்டில் சிறப்புக் காட்சி இல்லையா?