Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபல பின்னணி பாடகி காலமானார்... திரையுலகினர் இரங்கல்

Advertiesment
singer Nayyar
, திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (14:13 IST)
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பிரபல பின்னணிப் பாடகி நய்யாரா நூர் (71)  உடல்  நலக்குறைவால் காலமானார்.

நம் நாட்டிலுள்ள அசாம் மாநிலத்தில் பிறந்தவர் நய்யார் நூய்ர். இவர் தந்தைக்கு பாகிஸ்தான் நிறுவனர் முகமது அலி ஜின்னா மீது பற்று இருந்த காரணத்தால், இவரது குடும்பம் கடந்த 1958 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள கராய்ச்சிக்கு குடியேறியது.

பாகிஸ்தான் சினிமாவில்  பின்னணி பாடல்கள் பாடி வந்த நய்யாரா நூர், கஜல் பாடுவதிலும் வல்லவராக இருந்தார்.

பாகிஸ்தான் நாட்டின்  நைட்டிங்கேர்ள் என அழைக்கப்பட்ட  நய்யாரா நூர், சினிமா பின்புலம் இல்லாத குடும்பத்தில் பிறந்து, தன் திறமையின் மூலம் இசை உலகில் சாதித்த அவர்   கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று அவர் காலமானார். அவரது மறைவுக்கு அந்த நாட்டின் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் , சினிமா கலைஞர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனுஷ், ஐஸ்வர்யாவை சேர்த்து வைத்த மகன் யாத்ரா: வைரல் புகைப்படம்