Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரபல நடிகர் சமீர் காகர் இன்று காலமானார்...சினிமாத்துறையினர் இரங்கல்

actor sameer sagar
, புதன், 15 மார்ச் 2023 (15:30 IST)
பாலிவுட் மூத்த நடிகர் சமீர்காகர் மூச்சுத்திணறல் காரணமாக இன்று காலமானார். அவரது மறைவுக்கு சினிமாத்துறையினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நக்கட் என்ற தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலம் ஆனவர் நடிகர் சமீர் காகர். இவர், சர்க்கஸ், சஞ்சீவானி உள்ளிட்ட பல பிரபலமான தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்துப் புகழ்பெற்ற இவர், அடுத்து, பாலிவுட்டில், ஹாசி தோ ஃபேலி, ஜெய் ஹோ, படேல் கி பஞ்சாபி ஷாதி உள்ளிட்ட பல சினிமாவிலும் நடித்திருந்தார்.

சமீபத்தில், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார் சமீர் சாகர். இந்த நிலையில், நேற்று திடீரென்று அவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டதியால், சுய நினைவை இழந்தார்.

இதையடுத்து, குடும்ப  உறுப்பினர்கள், மருத்துவரை அழைத்தனர்.  அவரது ஆலோசனையின்படி, உடனடியாக எம்.எம். மருத்துவமனையில் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதற்கு சிகிச்சை பெற்று வந்த  நிலையில், இன்று அதிகாலை 4:30 மணிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, சமீர்  உயிரிழந்தார் என்று   அவரது சகோதரர் கணேஷ் காகர் கூறியுள்ளார்.

மேலும், அவரது இறுதிச்சடங்கு சமீர் இல்லத்தில் நடக்கும் என்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டு, இறுதிச் சடங்குகள் நடைபெற்ற பின்  பாபாய் நாகா மயானத்தில்  உடல் தகனம் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சில்லிட வைக்கும் ஸ்டண்ட் காட்சிகளால் கவனம் ஈர்த்த மிஷன் இம்பாசிபிள்- ரிலீஸ் தேதி அறிவிப்பு!