கமலின் அணுகுமுறையே வேறு தான் - பூஜா குமார் ஓபன் டாக்!

சனி, 9 நவம்பர் 2019 (13:15 IST)
நடிகர் கமல் ஹாசன் கடந்த 7ம் தேதி தான் தனது 65வது பிறந்த நாளை குடும்பத்துடன் கொண்டாடினார்.  அப்போது கமலின் குடும்ப புகைப்படத்தில் நடிகை பூஜா குமார் இடம் பெற்றிருந்தது இணையதளவாசிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாக்கப்பட்டது. 
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பூஜா குமாரிடம் இது குறித்து கேட்டதற்கு, "கடந்த 5 வருடமாக நான் கமலுடன் பணியாற்றி வருகிறேன். அவரை போன்ற ஒரு சிறந்த படைப்பாளி யாரும் இருக்க முடியாதது.  அவர் ஒரு மேஜிக் மேன்.... அவருக்கு இறைவன் நம்பிக்கை இல்லை  என்றாலும் அவரிடம் தொழில் பக்தி நிறைந்திருக்கிறது. 

எந்த ஒரு சின்ன விஷயத்தையும் அதிக கவனத்துடன் கையாள்வார். என்னக்கு எப்படி பொறுமையாக இருக்கவேண்டும் என்பதை கற்றுக்கொடுத்ததே அவர் தான்.  எந்த ஒரு விஷயத்திலும் அவரது அணுகுமுறை மிகச் சிறப்பாக இருக்கும் என கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் மெட்ராஸ் பாஷையில் விஜய்யை கலாய்க்கும் நயன் - ட்ரெண்டிங்கில் பிகில் பட காமெடி காட்சி..!