ஆண்டவனின் திருவிளையாடல்... கமல் குடும்ப போட்டோவில் நடிகை பூஜா குமார்!

வியாழன், 7 நவம்பர் 2019 (13:03 IST)
நடிகர் கம்லஹாசனின் குடும்ப புகைப்படத்தில் நடிகை பூஜா குமார் இருப்பதை இணையவாசிகள் கலாய்த்து வருகின்றனர். 
 
நடிகரும் அரசியல்வாதியுமான கமலின் 65 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த நாளன்றுதான் அவரது தந்தையின் நினைவு நாளும் வருகிறது. இதையடுத்து  கமல் தனது தந்தை சீனிவாசனின் சிலையை பரமக்குடியில் திறந்து வைத்தார்.
 
தனது பிறந்தநாளை முன்னிட்டும், தந்தையின் சிலை திறப்பை முன்னிட்டும் கம்ல குடும்பத்தினர் பரமக்குடியில் ஆஜராகியுள்ளனர். இந்நிலையில், கமலின் குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 
 
இந்த புகைப்படத்தில் கமலுடன் சில படங்களில் நடித்த பூஜா குமார் இடம்பெற்றுள்ளது தற்போது இணையவாசிகளின் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. இணையவாசிகளின் சில கமெண்டுக்கள் பின்வருமாறு... 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் கமல் இல்லாமல் "இந்தியன் 2" குழுவுடன் பிறந்தநாள் கொண்டாடிய பாபி சிம்ஹா - வீடியோ!