Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொக்க மக்கா என்ன அழகுடா...? கோட் சூட்டில் மாஸா இருக்கும் பூஜா ஹெக்டே!

Advertiesment
கொக்க மக்கா என்ன அழகுடா...? கோட் சூட்டில் மாஸா இருக்கும் பூஜா ஹெக்டே!
, சனி, 19 மார்ச் 2022 (13:55 IST)
மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை பூஜா ஹெக்டே முதன்முதலில் திரைத்துறையில் நடிக்க ஆரம்பித்தது தமிழ் சினிமாவில் தான். மிஷ்கின் கண்டெடுத்த அந்த பொக்கிஷம் தவறான தேர்வாக அமையுமா என்ன? ஆம் 2012ல் மிஷ்கின் இயக்கிய முகமூடி திரைப்படத்தில் நடித்து திரைத்துறையில் அறிமுகமானார். 
webdunia
ஆனால், அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு அவருக்கு அடையாளத்தை ஏற்படுத்தி தரவில்லை. இதனால் தமிழில் வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. அதன் பின் இந்தியில் ஸ்டார் நடிகரான ரித்திக் ரோஷனுக்கு ஜோடியாக மொகஞ்சதாரோ திரைப்படத்தில் நடித்தார். பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் தோல்வியை தமிழுவியதால் ராசியில்லாத நடிகை என பாலிவுட்காரர்களால் ஓரம்கட்டப்பட்டார். 
webdunia
தொடர்ந்து முயற்சியை கைவிடாமல் வாய்ப்புகள் கொடுத்த தெலுங்கு சினிமாவுக்கு உண்மையாக உழைத்து நல்ல நடிப்பை வெளிப்படுத்தி அதிகம் சம்பளம் வாங்கும் ஹிட் நடிகை  லிஸ்டில் இடம் பிடித்தார். துவ்வட ஜெகந்நாதம் திரைப்படம் மெகா ஹிட் அடித்தது. தொடர்ந்து ரங்கஸ்தலம் , மஹரிஷி, ஆல வைகுந்தப்புராமுலு உள்ளிட்ட படங்கள் மார்க்கெட்டின் உச்சத்தில் அமர வைத்தது. 
webdunia
தற்போது தமிழில் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ஆக்டீவாக இருந்து வரும் பூஜா ஹெக்டே தற்போது கோட் சூட் அணிந்து மாஸாக போஸ் கொடுத்து லைக்ஸ் அள்ளியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

Purple உடையில் பசங்களை மயக்கிய யாஷிகா - மனசு மஜாவா இருக்கேம்மா!