Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தென்னிந்திய சினிமாவுக்கு பெண்களின் இடுப்பின் மீது கவர்ச்சி உண்டு – பூஜா ஹெக்டேவின் பேச்சால் சர்ச்சை!

Advertiesment
தென்னிந்திய சினிமாவுக்கு பெண்களின் இடுப்பின் மீது கவர்ச்சி உண்டு – பூஜா ஹெக்டேவின் பேச்சால் சர்ச்சை!
, செவ்வாய், 10 நவம்பர் 2020 (08:57 IST)
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் பூஜா ஹெக்டே சமீபத்தில் அளித்த நேர்காணலில் பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் முன்னணி நடிகையாக இப்போது இருந்து வருகிறார் பூஜா ஹெக்டே. அவர் சமீபத்தில் நடித்து ஹிட்டான அலா வைகுந்தபுரம்லூ திரைப்படத்தில் அவரின் கால்களை பார்த்து கதாநாயகன் காமுறுவது போல காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும். இது பற்றி சமீபத்தில் அவரிடம் ஒரு நேர்காணலில் கேட்கப்பட்ட போது ‘தென்னிந்திய திரைப்பட துறைக்கும் இடுப்புப் பகுதியின் மீது கவர்ச்சி உண்டு. ஆனால், ஆண் எனது இடுப்பைப் பார்ப்பதை விட கால்களைப் பார்ப்பது பரவாயில்லை. ஆனால் படத்தில் அதற்காக நான் அவரைக் கண்டிப்பது போன்ற காட்சிகள் வரும். ஆனால் என்றுமே பெண்கள் காட்சிப் பொருளாக்கப்படுவது என்றுமே சரி கிடையாது.’ எனக் கூறியிருந்தார்.

இதையடுத்து பூஜா ஹெக்டே தெலுங்கு சினிமாவை இழிவு செய்துவிட்டதாக கண்டனங்கள் எழுந்தன. அதையடுத்து அவர் ‘நான் சொன்ன விஷயங்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டன. என்னைப் பற்றித் தீர்மானிக்கும் முன் முழு பேட்டியைப் பாருங்கள். தெலுங்கு திரையுலகே எனது மூச்சு. நான் என்றும் தெலுங்குத் திரைத்துறைக்குக் கடன்பட்டிருக்கிறேன்.’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்பைடர் மேனையே மாஸ்க் போட வச்சுட்டாங்களே – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!