Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்கும் ‘கொம்புசீவி’ படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ ரிலீஸ் அப்டேட்!

vinoth
ஞாயிறு, 6 ஏப்ரல் 2025 (10:34 IST)
தொடர்ந்து ஹிட் படங்களகக் கொடுத்து வந்த பொன்ராம் தற்போது ஒரு பின்னடைவில் இருக்கிறார்.  பொன் ராம் இயக்கிய எம் ஜி ஆர் மகன் மற்றும் DSP ஆகிய இரு படங்களும் படுதோல்வி படங்களாக அமைந்தன. இதனால் அவர் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் இப்போது தயங்குகின்றனர். இந்நிலையில் அவர் தன்னுடைய அடுத்த படத்தை மறைந்த நடிகர் விஜய்காந்தின் மகன் சண்முக பாண்டியனை வைத்து இயக்கி வருகிறார். இந்த படத்தில் சரத்குமார் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

தேனி உள்ளிட்ட பகுதிகளில் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் படத்தின் டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. படத்துக்கு ‘கொம்புசீவி’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் முதல் லுக் போஸ்டரில் சரத்குமார் மற்றும் சண்முகபாண்டியன் ஆகிய இருவரும் கையில் துப்பாக்கியோடு நிற்பது இடம்பெற்றுள்ளது. படத்தைப் பற்றி படக்குழுவினர் “1996 வாக்கில் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதியில் நடந்த கதைகள்.” என ஒரு குறிப்பையும் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு இந்த படத்தின் BTS கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்கும் ‘கொம்புசீவி’ படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ ரிலீஸ் அப்டேட்!

அவதார் மூன்றாம் பாகத்தின் ரிலீஸ் தேதியை உறுதி செய்த படக்குழு!

பராசக்தி படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் இங்குதான் நடக்கவுள்ளதா?

மலையாள சினிமாவில் அதிக வசூல்… மஞ்சும்மெள் பாய்ஸ் சாதனையை முறியடித்த எம்புரான்!

ஆயிரத்தில் ஒருவன் 2 வில் தனுஷ்& கார்த்தி… இயக்குனர் செல்வராகவன் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments