Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழைய பாடலின் வரியில் தொடங்கும் பொன்னியின் செல்வன் பாடல்… அட்டகாசமான அப்டேட்!

Webdunia
திங்கள், 17 ஜனவரி 2022 (15:50 IST)
பொன்னியின் செல்வன் படத்தின் முதல் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

மணிரத்னத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று  கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இரு பாகங்களாக உருவாகும் இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா. பிரகாஷ்ராஜ். ஜெயராம். சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தின் முதல்பாகம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது படத்தில் நடித்துள்ள பல்வேறு கலைஞர்களும் தங்களுக்கான டப்பிங்கை பேசி முடித்து வருகின்றனர். டப்பிங் உள்ளிட்ட இதர பணிகள் முடிந்ததும், பிரம்மாண்டமாக இசை வெளியீட்டு விழா நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் விரைவில் ரஹ்மான் குரலில் உருவாக்கப்பட்டுள்ள முதல் சிங்கிள் பாடல் இணையத்தில் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த பாடலின் முதல் வரி 1950 களில் வெளியான நீலமலைத் திருடன் என்ற படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலான ’சத்யமே லட்சியமாக கொள்ளடா’ என்ற பாடலின் தொடக்க வரியை எடுத்து பயன்படுத்தியுள்ளதாம் படக்குழு.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாத்தி புகழ் சம்யுக்தா மேனனின் க்யூட் லுக் போட்டோஷூட்!

கார்ஜியஸ் லுக்கில் ஐஸ்வர்யா லெஷ்மி.. கலக்கல் ஃபோட்டோஷூட்!

பான் இந்தியா படமாக உருவாகும் த்ரிஷ்யம் 3… மோகன்லால் கொடுத்த அப்டேட்!

தனுஷ் & ராஜ்குமார் பெரியசாமி இணையும் படத்தில் ஹீரோயினாக ஸ்ருதிஹாசன்!

புஷ்பா 2 படக்குழுவினர் மீது புகார்… கிளம்பிய சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments