Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணிரத்னம் மேல் பொறாமைபடுபவர்களில் நானும் ஒருவன்… கமல் பேச்சு!

Webdunia
வியாழன், 30 மார்ச் 2023 (13:06 IST)
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் சுமார் 500 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்து தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த படமாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாவதை அடுத்து நேற்று படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீடு நடந்தது. அதில் படத்தில் நடித்த கலைஞர்களோடு கமல்ஹாசன் மற்றும் சிம்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கமல்ஹாசன் பேசும்போது “ இயக்குனர் மணிரத்னத்தைப் பார்த்து பொறாமைப் படுபவர்களில் நானும் ஒருவன். நாயகனுக்கு முன்னாள் தொடங்கிய எங்கள் பந்தம் இன்றும் தொடர்கிறது.” எனப் பேசினார். நாயகன் படத்துக்குப் பிறகு 35 ஆண்டுகள் கழித்து இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளட்னர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

கலர்ஃபுல் மாடர்ன் உடையில் அசத்தலான போட்டோ ஆல்பத்தை வெளியிட்ட க்ரீத்தி ஷெட்டி!

க்யூட்னெஸ் ஓவர்லோடட் போட்டோ ஆல்பம்… அனுபமாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோ ஆல்பம்!

“தமிழ்நாடு திராவிட நாடுப்பா… இங்கே மதவாத சக்திகளுக்கு இடமில்லை..” பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் ட்வீட்!

ஏன் ஹீரோவாக நடிப்பதில்லை என்ற கேள்விக்கு தன் ஸ்டைலில் நக்கலாக பதில் சொன்ன சத்யராஜ்!

அடுத்த கட்டுரையில்
Show comments