Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 நாளில் பொன்னியின் செல்வன் 2 வசூல் என்ன? முதல் பாக வசூலை கடக்குமா?

Webdunia
ஞாயிறு, 7 மே 2023 (10:22 IST)
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட பலர் நடித்து வெளியாகியுள்ள படம் ‘பொன்னியின் செல்வன்’. கல்கி எழுதிய வரலாற்று புதினமான ‘பொன்னியின் செல்வன்’ நாவலை தழுவி இரண்டு பாகமாக உருவாக்கப்பட்ட இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட 400 கோடி ரூபாயை உலகளவில் வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து தற்போது பொன்னியின் செல்வன் 2ம் பாகம் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்த சூழலில் பல பகுதிகளில் ஹவுஸ் புல் காட்சிகளுடன் ஓடி வருகிறது. ஆனால் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் வெளியாகி 8 நாட்களில் உலகளவில் 250 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகவும் இந்தியாவில் 130 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பொன்னியின் செல்வன் முதல் பாகத்துக்குக் கிடைத்த வரவேற்பு இரண்டாம் பாகத்துக்குக் கிடைக்கவில்லை என்பதால் வசூலிலும் பின் தங்குகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மலையாள படத்தில் அறிமுகமாகும் ஊர்வசி மகள்.. திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்து..!

’தக்லைஃப்’ தோல்வியால் பெரும் நஷ்டம்.. ‘அன்பறிவ்’ படம் டிராப்பா? கமல் முடிவு என்ன?

பிங்க் நிற மினி ஸ்கர்ட் உடையில் ஒயில்நடை போடும் ஜான்வி கபூர்.. அழகிய ஆல்பம்!

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

கேப்டன் கேமியோ வொர்க் அவுட் ஆனதா?... படை தலைவன் எப்படி இருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments