பொன்னியின் செல்வன் -2 திரைப்படம் ரூ.300 கோடி வசூல்!

Webdunia
திங்கள், 8 மே 2023 (22:04 IST)
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட பலர் நடித்து வெளியாகியுள்ள படம் ‘பொன்னியின் செல்வன்’.

கல்கி எழுதிய வரலாற்று புதினமான ‘பொன்னியின் செல்வன்’ நாவலை தழுவி இரண்டு பாகமாக உருவாக்கப்பட்ட இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி, ரூ 400 கோடி வசூலித்தது.

இப்படம்  தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல்லாக இருக்கும் நிலையில், பொன்னியின் செல்வன் 2 படம்  ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியானது.

இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்த சூழலில் பல பகுதிகளில் ஹவுஸ் புல் காட்சிகளுடன் ஓடி வருகிறது.

சினிமா விமர்சகர்கள், ரசிகர்கள் எனப் பலரும் இப்படத்தைப் புகழ்ந்து, பாராட்டி வரும் நிலையில், இப்படம்  இன்றுவரை உலகம் முழுவதும் ரூ.300 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் லைகா அதிகாரப்பூர்வமாக  தெரிவித்துள்ளது.

இதனால், படக்குழு மகிழ்ச்சியடைந்துள்ளனர். விரைவில் முதல் பாகத்தின் வசூல் சாதனையை முறியடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அந்த படம் சூப்பர் ஹிட் ஆனதும் ‘ஆட்டோகிராஃப்’ வேண்டாம்னு சொல்லிட்டார்.. விக்ரம் குறித்து சேரன்!

தலைப்பே எங்களுக்கு எதிராக அமைந்துவிட்டது – கிஸ் பட இயக்குனர் சதீஷ் வேதனை!

இது என் கடமை!.. காசு வேண்டாம்!. அபிநய்க்காக நடிகரிடம் பணம் வாங்க மறுத்த KPY பாலா!...

காந்தா படத்துக்கு எழுந்த சிக்கல்… தியாகராஜ பாகவதரின் பேரன் வழக்கு..!

தனுஷின் அடுத்த படத்தில் முக்கிய வேடத்தில் பிரபுதேவா…!

அடுத்த கட்டுரையில்
Show comments