பொன்னியின் செல்வன்-1 பட ''ஸ்னீக் பீக் ''காட்சிகள் ரிலீஸ்!

Webdunia
செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (18:11 IST)
பொன்னியின் செல்வன் என்ற  படத்தின்  புதிய ஸ்னீக் பீக் காட்சிகள்  இன்று வெளியாகியுள்ளது.

கல்கி எழுதிய பிரபல நாவலான பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம்.

இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ‘’பொன்னி நதி’’ என்ற பாடல் ரிலீஸானது.  இதையடுத்து வீழ சோழா ஆகிய பாடல்கள் அடுத்தது வெளியாகி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தியது. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.

பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் போன்ற படங்களுக்குப் பிறகு இந்தியாவில் பெரும் பொருட்செலவில் 2 பாகங்களாகத் தயாராகியுள்ள பொன்னியின் செல்வன் படத்திற்கு உலகத் தமிழர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில்,இப்படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் காட்சி நேற்று பெங்களூரில் வெளியான   நிலையில் இப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள்  இன்று வெளியாகியுள்ளது.

அதில், பாண்டிய நாட்டைச் சேர்ந்தவராக நடித்துள்ள கிஷோர், ரியாஷ் உள்ளிட்டோர்   நடித்துள்ளனர். இதில், கிஷோர், ''வீரபாண்டியனின் மகன்  அமரபுஜங்க பாண்டியனின்  அரியனையில் அமர்ந்திருக்கிறார். அவர் காலடியில் சூளுறைப்போம்! எங்கள் உயிர் மீன் கொடிக்கு உரியது. எங்கள் வாழ்க்கை பாண்டிய மன்னனுக்குரியது; எங்கள் மன்னன் வீரபாண்டியரை தலையறுத்துக் கொன்ற சோழ குல ஆதித்ய கரிகாலனைக் கொல்வோம்…அவன் தம்பி அருண்மொழிவர்மன், குந்தவையைக் கொல்வோம்'' என்று ஆவேசமாகப்  பேசும் வசனங்கள்  இடம்பெற்றுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

முதல் பாகத்தில் செத்து போன கேரக்டர் எப்படி இரண்டாம் பாகத்தில்? ‘ஜெயிலர் 2’ படத்தில் விநாயகன்?

தனுஷ், ஸ்ரேயாஸ் ஐயர்.. யாரை காதலிக்கிறார் மிருணாள் தாக்கூர்? பரபரப்பான இன்ஸ்டா பதிவு..!

ஜப்பானில் வெளியாகும் ‘புஷ்பா 2’.. ஜப்பான் மொழியில் புதிய டிரைலர் வெளியீடு!

ரிலீஸுக்கு முன்பே கோடியை அள்ளிய ‘ஜனநாயகன்’.. ஆனால் அதிலும் ஒரு சிக்கல்

அடுத்த கட்டுரையில்
Show comments