Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Friday, 25 April 2025
webdunia

யாஷிகாவை தாய்க்கிழவி என கிண்டலடித்த பொன்னம்பலம்

Advertiesment
பிக்பாஸ்
, புதன், 20 ஜூன் 2018 (11:15 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பொன்னம்பலம் யாஷிகாவைப் பார்த்து தாய்க்கிழவி என்று கிண்டலடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. 
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பிக்பாஸ் 2' நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பை தொடங்கியுள்ள நிலையில் நேற்று முதல் லக்சுரி டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்க்கில் ஒவ்வொருவருக்கும் ஒரு கவர் கொடுக்கப்பட்டிருக்கும் என்றும், அந்த கவரில் உள்ள கேள்விக்கு நேர்மையாக பதில் சொல்ல வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
 
இந்த டாஸ்க்கில் தனக்கான கவரை எடுத்தார் பொன்னம்பலம். அதில் பிக்பாஸ் வீட்டில் யார்  பேசிக்கொண்டே இருப்பது என்பது தான் கேள்வி. சற்று யோசித்த பொன்னம்பலம் எப்பொழுதும் இடைவிடாமல் பேசிக்கொண்டிருப்பது யாஷிகா தான் என்றார்.
 
மேலும் யாஷிகாவை பார்த்து தாய்க்கிழவி எந்நேரமும் லொடலொடன்னு பேசிட்டு இருக்கு என நாட்டாமை படத்தில் வரும் டைலாக்கை பேசினார். மேலும் அந்த டைலாக்கில் வரும் ...தா என்ற வார்த்தையை அப்படியே கூறிவிட்டார் பொன்னம்பலம். கடுப்பான யாஷிகா அம்மா பத்தி எல்லாம் பேசாதிங்க என்றார். இதனால் பிக்பாஸ் செட்டில் சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அய்யயோ அவன் கூட வேண்டாம் : கதறும் யாஷிகா ஆர்மி