Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை திரிஷாவுக்கு காவல்துறை கடிதம்

Webdunia
வெள்ளி, 1 டிசம்பர் 2023 (13:43 IST)
வில்லன் நடிகர் மன்சூர் அலிகான், நடிகை த்ரிஷா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த விவகாரத்தில் எழுத்துப் பூர்வமாக விளக்கம் அளிக்க திரிஷாவுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. 
 
தமிழ் சினிமாவின் பிரபலமான வில்லன் நடிகரான மன்சூர் அலிகான், அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் லியோ படம் குறித்து இவர் பேசியபோது த்ரிஷா குறித்து பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு த்ரிஷா கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் லோகேஷ் கனகராஜ், குஷ்பூ, சிரஞ்சீவி உள்ளிட்ட பலரும் மன்சூர் அலிகானுக்கு கண்டனங்கள் தெரிவித்திருந்தனர்.
 
இதுதொடர்பாக மன்சூர் அலிகான் மேல் வழக்கு தொடரப்பட்ட நிலையில் சமீபத்தில் த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கையும் வெளியிட்டார் மன்சூர் அலிகான். அவர் மன்னிப்பை ஏற்றுக் கொள்ளும் வகையில் த்ரிஷாவும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். 
 
இவ்விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து மன்சூர் அலிகானுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தது.
 
இந்த விவகாரம் தொடர்பாக தொடர்பாக திரிஷா தரப்பிடம் விளக்கம் கேட்டு ஆயிரம் விளக்கு மகளிர் காவல்துறை கடிதம் எழுதியுள்ளது. எழுத்துப் பூர்வமாக விளக்கம் அளிக்க திரிஷாவுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. 
 
திரிஷாவை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக  நடிகர் மன்சூர் அலிகானிடமும் ஆயிரம் விளக்கு காவல்துறையினர் விசாரணை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காதலிக்க நேரமில்லை செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்!

அல்லு அர்ஜுன் கைதுக்குப் பிறகு 70 சதவீதம் உயர்ந்த புஷ்பா 2 வசூல்?

'விடுதலை 2’ படத்திற்கு ‘ஏ’ சர்டிபிகேட்: ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா?

வேட்டையன் ரிலீஸுக்கு முன்பே அதற்குக் கள்ளிப்பால் கொடுத்துவிட்டார்கள்… இயக்குனர் வேதனை!

கோட் படத்தை விட அதிக ரசிகர்கள் அமரன் படத்தைப் பார்த்துள்ளார்களா?.. வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments