Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

'பிதா' படத்தின் போஸ்டரை இயக்குனர்கள் அரவிந்தராஜ், பேரரசு, நடிகர் மாஸ்டர் மகேந்திரன் ஆகியோர் வெளியிட்டனர்!

Advertiesment
Pidha movie

J.Durai

, புதன், 24 ஜூலை 2024 (18:26 IST)
ஜூலை 26'ம் தேதி வெளியாகவுள்ள பிதா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் போஸ்டர் வெளியீட்டு நிகழ்வில், 23' மணி நேரம், 23' நிமிடங்களில் எடுக்கப்பட்ட 'பிதா' படம் திரையிடப்பட்டது.
 
தயாரிப்பாளர்கள் ஜி.சிவராஜ், அன்புச் செழியன், ஆக்ஷன் ரியாக்ஷன் ஜெனீஷ், இயக்குனர்கள் அரவிந்தராஜ், பேரரசு, கேபிள் சங்கர், எஸ்.சுகன், நடிகர்கள் மாஸ்டர் மகேந்திரன், ஆதேஷ் பாலா, சாம்ஸ், சம்பத்ராம், ஸ்ரீராம் சந்திரசேகர், மாரிஸ் ராஜா, மாஸ்டர் தர்ஷித், நடிகை  ரிஹானா ஆகியோர்கள் இந் நிழழ்வில் கலந்துக் கொண்டனர்.
 
இந்திய திரைப்பட வரலாற்றில், 23 மணி நேரம், 23 நிமிடத்தில் எடுத்து முடிக்கப்பட்ட முதல் திரைப்படம் 'பிதா'
 
எஸ்.ஆர்.பிலிம் பேக்டரி ஜி.சிவராஜ் தயாரிப்பில், எஸ்.சுகன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை, தரமான  சிறு முதலீட்டு திரைப்படங்களை தொடர்ந்து வெளியிடும்  'ஆக்‌ஷன் ரியாக்‌ஷன்' சார்பில், உலகெங்கும் வெளியிடுகிறார் ஜெனீஷ்.
 
காது கேளாத, வாய் பேச முடியாத பத்து வயது சிறுவன், கடத்தப்பட்ட தொழில் அதிபரையும், தனது அக்காவையும் காப்பாற்றுவது தான் இப்படத்தின்  கதை.
 
இத் திரைப்படத்தில் ஆதேஷ் பாலா, சாம்ஸ், மாஸ்டர் தர்ஷித், ஸ்ரீராம் சந்திரசேகர், அனு கிருஷ்ணா, ரிஹானா, மாரீஸ் ராஜா, அருள்மணி ஆகியோர் நடித்துள்ளனர்.
 
எஸ்.சுகன்  இயக்கியுள்ளார். வசனம் பாபா கென்னடி, ஒளிப்பதிவு இளையராஜா, இசை நரேஷ், எடிட்டர் ஸ்ரீவர்சன், கலை கே.பி.நந்து, மக்கள் தொடர்பு கோவிந்தராஜ், தயாரிப்பு எஸ்.ஆர்.பிலிம் பேக்டரி ஜி.சிவராஜ், 'ஆக்‌ஷன் ரியாக்‌ஷன்' ஜெனீஷ், பிதா படத்தை ஜூலை 26'ம் தேதி உலகெங்கும் வெளியிடுகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எது நடக்கப்போவது என்று நினைத்தேனோ அது இப்ப நடக்க போகுது: ‘டிமாண்டி காலனி 2’ டிரைலர்..!