Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிச்சைக்காரன் நாயகியின் அதிகாரப்பூர்வ திருமணம்

பிச்சைக்காரன் நாயகியின் அதிகாரப்பூர்வ திருமணம்
, வெள்ளி, 27 ஜனவரி 2017 (13:02 IST)
பிச்சைக்காரன் படத்தில் நாயகியாக நடித்தவர் சாட்னா டைட்டஸ். இவர் பிச்சைக்காரன் படத்தை வெளியிட்ட  கே.ஆர்.பிலிம்ஸின் பங்குதாரரான கார்த்தியை ரகசிய திருமணம் செய்து கொண்டதும், கார்த்தி என்னுடைய மகளை  ஏமாற்றிவிட்டார் என சாட்னாவின் அம்மா கண்ணீர் சிந்தியதும், சந்தர்ப்ப சூழ்நிலையில் திருமணம் செய்ய வேண்டியதாகிவிட்டது என்று சாட்னா ஒரு ஆப்பாயில் அறிவிப்பை வெளியிட்டதும் அறிந்ததே.

 
காலம் எல்லாவற்றையும் ஆற்றும் மருந்தல்லவா. கசப்புகள் நீங்கி முறைப்படி கார்த்தியும், சாட்னாவும் வருகிற பிப்ரவரி 6 ஆம்  தேதி சேலத்தில் திருமணம் செய்து கொள்கின்றனர்.
 
இந்தத் திருமணத்தில் இருவரின் பெற்றோர்களும், உறவினர்களும் கலந்து கொள்கிறார்கள். பத்தாம் தேதி சென்னையில் உள்ள  நட்சத்திர விடுதியில் திருமண வரவேற்பு நடைபெற உள்ளது.
 
எப்படியோ கலக திருமணம் சுபத்தில் முடிந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வருங்கால கணவருக்கு 27 லட்ச ரூபாய் மதிப்புள்ள பரிசை தந்த சமந்தா