Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிச்சைக்காரன் 2 இயக்குனர் திடீர் மாற்றம்… அறிவிப்பை வெளியிட்ட விஜய் ஆண்டனி!

பிச்சைக்காரன் 2 இயக்குனர் திடீர் மாற்றம்… அறிவிப்பை வெளியிட்ட விஜய் ஆண்டனி!
, வியாழன், 11 மார்ச் 2021 (07:46 IST)
விஜய் ஆண்டனி திரைக்கதை எழுதியுள்ள பிச்சைக்காரன் 2 படத்தின் இயக்குனர் பொறுப்பில் இருந்து ப்ரியா கிருஷ்ணசாமி விலகியுள்ளார்.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக வளர்ந்து வந்த காலத்தில் திடீரென நடிகர் அவதாரம் எடுத்தார் விஜய் ஆண்டனி. அவர் நடித்த நான், சலீம் ஆகிய படங்கள் சிறப்பாக ஓடியதால் வரிசையாக படங்களில் நடித்தார். 2016 ஆம் ஆண்டு அவர் நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் அவரை கமர்ச்சியல் கதாநாயகனாக மாற்றியது. தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் அந்த படம் பிரம்மாண்டமான வெற்றியை பெற்றது.

அதன் பின் அவர் நடித்த படங்கள் வரிசையாக தோல்வி அடைய, தற்போது நான்கு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் கொரோனா லாக் டவுனில் பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான திரைக்கதையை எழுதி முடித்தார். மேலும் அந்த படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனர் பிரியா கிருஷ்ணசாமி இயக்க உள்ளதாக அறிவித்தார். அதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமானது.

ஆனால் இப்போது இயக்குனர் பிரியாவுக்கு பதிலாக விஜய் ஆண்டனி நடித்துள்ள கோடியில் ஒருவன் படத்தை இயக்கியுள்ள ஆனந்த கிருஷ்ணனே இயக்க உள்ளதாக அறிவித்துள்ளார். ஏன் இயக்குனர் பிரியா மாற்றப்பட்டார் என்பது குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் பாடலுக்கு நடனமான இந்திய வீரங்கனைகள் !