பொங்கல் ரேஸில் பின்வாங்கும் பேட்ட... ரஜினியா காரணம்?

Webdunia
சனி, 8 டிசம்பர் 2018 (14:07 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியாக உள்ள படம் பேட்ட. ஆனால், இந்த படம் பொங்கலுக்கு வெளியாவதில் ரஜினிக்கு விருப்பம் இல்லையாம். 
 
அதாவது, ரஜினியின் நடிப்பில் கடந்த நவம்பர் மாதம் 2.0 படம் வெளியானது. இந்த படம் ரசிகர்கல் மத்தியில் நல்ல வரவேறை பெற்றுள்ளது. மேலும், திரைத்துறையை சேர்ந்த பலரும் படத்தை பாராட்டியுள்ளனர். 
 
இந்நிலையில், ஒரு படம் வெளியாகிய ஒரே மாதத்தில் இன்னொரு படத்தை வெளியிட வேண்டுமா என்ற எண்ணம் ரஜினிக்கு தோன்றியுள்ளதாம். எப்போதும் பெரிய ஸ்டார் படங்கள் அடுத்தடுத்து உடனே வெளியாகாது. அப்படி வெளியானால் ரசிகர்களுக்கு அந்த அளவு எதிர்ப்பார்ப்புகளும் இருக்காது. 
எனவே, ரஜினி படத்தை பொங்கலுக்கு வெளியிடாமல் தமிழ் புத்தாண்டுக்கு வெளியிடலாம் என தயாரிப்பு நிறுவனத்திடம் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. 
 
ஏனெனில், படத்தை பொங்கலுக்கு வெளியிடும் நோக்கத்தில் படத்தின் பாடல் வெளியிடப்படுகிறது. மேலும், இந்த படத்தில் சிம்ரன், விஜய் சேதுபதி, த்ரிஷா, சசிகுமார், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, மேஹா ஆகாஷ் ஆகியோர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரி ரிலீஸுக்குத் தயாரான அஜித்தின் சூப்பர்ஹிட் திரைப்படம்!

இயக்குனர் எல்லை மீறினார்… நடிகர் மௌனம் காத்தார்… நடிகை திவ்யபாரதி ஆதங்கம்!

லோகா நாயகி கல்யாணி நடிக்கும் புதிய தமிழ்ப் படம்… பூஜையோடு தொடக்கம்!

என் கணவரப் பாத்தா DNA டெஸ்ட்டுக்கு வர சொல்லுங்க… ஜாய் கிரிசில்டா நக்கல் பதிவு!

காந்தாரா எஃபக்ட்டால் கருப்பு படத்தில் நடக்கும் அதிரடி மாற்றங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments