Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

"பேட்ட" திரைவிமர்சனம்

, வியாழன், 10 ஜனவரி 2019 (11:10 IST)
படம்: பேட்ட 
இயக்குனர்: கார்த்திக் சுப்புராஜ் 
நடிகர்கள் : ரஜினிகாந்த், த்ரிஷா, சிம்ரன், சசிகுமார், நவாஸுதீன், பாபி சிம்ஹா, விஜய் சேதுபதி
தயாரிப்பு : – சன் பிக்சர்ஸ் 
இசையமைப்பளார் :- அனிருத்   
வெளியான தேதி : 10-01-2019

 
கதைக்களம்
 
ரஜினிகாந்த் வார்டனாக ஒரு கல்லூரிக்கு வருகிறார். அந்த கல்லூரியில் பாபி சிம்ஹா ஜுனியரை ராக் செய்து வருகிறார். அவர்கள் டெரர் கேங் என்ற பெயரில் கல்லூரியில் அட்டகாசம் செய்கிறார்கள் .
 
முதல் நாளே அவர்கள் ஆட்டத்தை ரஜினி அடக்க, அதன் பின்பு ஹாஸ்டல் அவர் கண்ட் ரோலுக்கு வருகிறது. பிறகு அதே கல்லூரியில் படிக்கும் அன்வர், மேகா ஆகாஷை காதலிக்கிறார். அவர்கள் காதலுக்கு ரஜினி உதவி செய்ய, ஒரு பக்கம் பாபி ரஜினியை அடிக்க ஆள் செட் செய்கிறார். ஆனால், வந்து இறங்குவதோ வேற கேங். அதற்கு ஒரு பிளாஷ் பாக் 

webdunia

 
அந்த பிளாஷ் பேக்கில் தான் கல்லுரியில் படிக்கும் அந்த மாணவன் சசி குமாரின் மகன் என்று தெரிகிறது. சசி குமார் வில்லனின் உறவினரை காதலித்து திருமணம் குமார் அவரை வில்லன் கொன்றுவிடுகிறார். அதற்கு சசிகுமாரின் நண்பரான பழி வாங்க துடிக்கும் ரஜினியின் மனைவியையும் வில்லன் கொன்றுவிடுகிறார். 
 
யார் அவர்கள், அவர்களுக்கும் ரஜினிக்கும் என்ன சம்மந்தம், எதற்காக அன்வரை கொலை செய்ய இவர்கள் வருகிறார்கள் என்பதன் அதிரடியாக உள்ளது .பின்னர் சசிகுமாரின் மகனையும் கொள்ள வேண்டும் என்று வில்லன் துடிக்க அவரை காப்பற்ற ரஜினி கல்லூரியில் வார்டனாக சேர்கிறார். பின்னர் அவரை வில்லனின் மகன்களான விஜய் பின்னர் மற்றும் பாபி சிம்ஹாவிடம் இருந்து ரஜினி எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் மீதிக்கதை. 
 
படத்தை பற்றிய அலசல்
 
ரஜினிகாந்த் முழுக்க முழுக்க சூப்பர் ஸ்டார் ப்ராண்ட் தான் இந்த பேட்ட. எத்தனை நாட்கள் ஆகிவிட்டது இப்படி ஒரு ரஜினிகாந்தை பார்த்து என்பது தான் ரசிகர்களின் ஏக்கமான கருத்தும்.
 
வார்டனாக மாணவர்களிடம் அன்பு, கண்டிப்பு, அதே நேரம் வில்லன் கும்பலிடம் அதிரடி என  ரஜினியின் துள்ளல் காமெடி, பாம்பு பாம்பு என்று முனிஷ்காந்தை கிண்டல் செய்வது, பாபியின் அப்பா வீட்டிலேயே சென்று அவரை கூலாக டீல் செய்வது என அத்தனையும் அற்புதம் .

webdunia

 
சிம்ரன், த்ரிஷா எல்லாம் செட் ப்ராப்பர்டி தான், விஜய் சேதுபதி தனக்கான வேலையை கச்சிதமாக செய்துள்ளார்.
 
வசனங்கள்:- 
 
படத்தின் வசனங்கள் திரையரங்கில் கைதட்டல் வாங்குகிறது. அதுவும் ரஜினிக்கான அரசியல் களத்திற்கு ஏற்றது போல் உள்ளது. "இத்தனை வருஷம் பொறுத்தாச்சு இனிமே நாம பாய வேண்டிய நேரம்" என ரசிகர்களை மீண்டும் தெம்பூட்டுகின்றார்.
 
அனிருத் இசையில் பாடல்கள் மரண மாஸ்  என்றாலும், டைட்டில் கார்டில் வந்த தேவா இசைக்கு இணையாக கூட பின்னணி இல்லை என்று தான் சொல்லவேண்டும் . பேட்ட பராக் பாடலை வைத்தே ஓட்டிவிட்டார் அனிருத் . திரு ஒளிப்பதிவு சூப்பர்.
 
கார்த்திக் சுப்புராஜ் ஒரு இயக்குனராக இல்லாமல் முழுக்க முழுக்க ஒரு தரமான ரஜினி ரசிகராக இந்த படத்தை கொடுத்துள்ளார். கடந்த சில காலமாக ரஜினியின் மாஸ் கடந்த ஸ்டைலை மிஸ் செய்த ரசிகர்களுக்கு இது ஒரு தரமான மரண மாஸ் படம். மொத்தத்தில் இந்த படத்திற்கு 
 
வெப்துனியாவின் மதிப்பு 8/10

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'பேட்ட' படத்தின் பஞ்ச் வசனங்கள்