Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் படத்தை இயக்குகிறாரா பேரரசு ? – கோலிவுட் ஹாட் டாக் !

விஜய் படத்தை இயக்குகிறாரா பேரரசு ? – கோலிவுட் ஹாட் டாக் !
, செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (10:33 IST)
விஜய்யின் 65 ஆவது படத்தை திருப்பாச்சி மற்றும் சிவகாசி போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய பேரரசு இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய்யின் சினிமா கேரியரில் முக்கியமானப் படங்களான உருவாகிய திருப்பாச்சி மற்றும் சிவகாசி ஆகியப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் பேரரசு. அதன் பின் அவர் அஜித், விஜயகாந்த் மற்றும் பரத் ஆகியோரை வைத்து வரிசையாகப் படங்களை இயக்கினாலும் இந்த இருப் படங்கள் அளவுக்கு வெற்றி பெறவில்லை.

அதன் பின் நீண்ட காலமாக படம் எதுவும் இயக்காமல் இருந்து வருகிறார். இந்நிலையில் விஜய்யின் 65 ஆவது படத்தை அவர் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை விஜய் தரப்போ பேரரசு தரப்போ மறுக்கவும் இல்லை; ஏற்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நயன்தாரா நாயகனுக்கு ஜோடியாகும் ‘அருவி’ நாயகி!