முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறைவுக்குப் பின், திமுகவின் தலைவரானார் மு.க.ஸ்டாலின். அதேபோல் அவரது மகனும் பிரபல சினிமா நடிகருமான உதயநிதி அக்கட்சியின் இளைஞர் செயலாளர் என்னும் பதவியில் அமர்ந்தார்.
கட்சியில் ஆரம்பக்கட்டப் பதவிகளில் வகிக்காமல் வாரிசு அடிப்பையில் அவருக்குப் பதவி வழங்கப்பட்டதாக பலரும் உதயநிதியை விமர்சித்தனர்.
ஆனால் கடந்த மக்களவைத் தேர்தலில் அவர் அக்கட்சியின் வெற்றிக்கு கடுமையாக உழைத்தார். அவர் தந்தையுடன் இணைந்து கட்சியை அரவணைத்துச் சென்றதன் விளைவால் அக்கட்சி 2019 மக்களவைத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்றது. இதையயடுத்து, அவருக்கு அப்பதவி வழங்கப்பட்டது.
தற்போது சட்டமன்றத் தேர்தலில் ஜெயிக்க வேண்டிய உதயநிதி தீவிரமாகப் பணியாற்றி பரப்புரை செய்து வருகிறார்.
இந்நிலையில்,அவர் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு புதிய புகைப்படத்தை புரைஃபைல் பிக்சராக வைத்தார்.
உதயநிதி நடிப்பில் கண்ணே கலைமானே படத்தை இயக்கிய சீனுராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில், இப்படம் குறித்துப் பதிவிட்டுள்ளதாவது: மக்கள்அன்பன் திரு,உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகள்
@Udhaystalin எனப் பதிவிட்டுள்ளார். இதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.