Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’பேச்சி’ திரைப்படத்தின் வெற்றி விழா!

Advertiesment
’பேச்சி’ திரைப்படத்தின் வெற்றி விழா!

J.Durai

, திங்கள், 12 ஆகஸ்ட் 2024 (12:34 IST)
வெயிலோன் எண்டர்டெயின் மெண்ட் சார்பில் கோகுல் பினாய் மற்றும் வெரூஸ் புரொடக்‌ஷன்ஸ்  சார்பில் ஷேக் முஜீப் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன்.பி எழுத்து இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டு பெற்று, மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது 10 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழுவினர்  சென்னை பிரசாத் லேபில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
 
இந் நிகழ்வினில் 
பேச்சி கதாபாத்திரத்தில் நடித்த சீனிபாட்டி பேசுகையில்......
 
அனைவருக்கும் வணக்கம், எனக்கு 90 வயதாகிறது. நான் ஏற்காடு மலையில் சிரமப்பட்டு ஏறி நடித்தேன். என்னுடன் அனைவரும் கஷ்ட்டப்பட்டு நடித்தார்கள். இரண்டாம் பாகம் எடுத்தால் அதிலும் நடிப்பேன். உங்களுடைய வாழ்த்துகள் எங்களுக்கு தொடர்ந்து கிடைக்க வேண்டும், அனைவருக்கும் நன்றி என்றார்.
 
பாலசரவணன் மனைவி கதாபாத்திரத்தில் நடித்த பானு பிரியா  பேசுகையில்......
 
பேச்சி படத்தில் என்னை நடிக்க வைத்த வெயிலோன் டீம் மற்றும் இயக்குநருக்கு நன்றி. இரண்டாம் பாகம் எடுத்தால் அதில் நான் இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன் நன்றி என்றார்.
 
நடிகர் பாலசரவணன் பேசுகையில்.......
 
பேச்சி படத்தின் வெளியீட்டுக்காக காத்திருந்த போது நாங்கள் எதிர்பார்த்தது, படம் டீசண்டாக இருக்கிறது, என்று சொன்னால் போதும் என்பது தான். ஆனால், இன்று நாங்கள் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது, இதற்கு காரணம் பத்திரிகைகள் தான். உங்கள் எழுத்துக்கள் மூலமாகவும், உங்கள் விமர்சனங்கள் மூலமாகவும் படத்தை மக்களிடம் மிகப்பெரிய அளவில் கொண்டு சேத்து உங்களுக்கும், உங்கள் விமர்சனங்கள் மூலம் தியேட்டருக்கு சென்று படம் பார்த்த மக்களுக்கும் நன்றி. நாங்கள் பல தியேட்டர்களுக்கு சென்று பார்த்தோம், அப்போது அனைத்து இடங்களிலும் ஹவுஸ் புல்லாக இருந்தது நாங்கள் எதிர்பார்க்காதது. இரவுக் காட்சிகள் கூட அரங்கம் நிறைந்த காட்சிகளாக இருந்தது. குடும்பம் குடும்பமாக படத்தை பார்த்தார்கள், சிறியவர்கள், பெரியவர்கள் வரை என அனைத்து தரப்பினரும் படத்தை பார்த்தார்கள், இதற்கு காரணம் உங்களது தெளிவான விமர்சனம் தான்,  அதற்கு மிகப்பெரிய நன்றி.
 
அதேபோல் தனிப்பட்ட முறையில் நான் ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும், இந்த படத்தில் நான் நடித்த மாரி கதபாத்திரத்தை குறிப்பிட்டு அதில் எனது நடிப்பை அனைவரும் பாராட்டி எழுதியிருக்கிறார்கள்இந்த படம் மட்டும் அல்ல, நான் நடிக்கும் அனைத்து படங்களிலும் என்னை குறிப்பிட்டு பாராட்டி எழுதி வருகிறார்கள், அதற்காகவும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
 
எனக்கு மாரி கதாபாத்திரத்தை கொடுத்த இயக்குநர் ராமச்சந்திரனுக்கு நன்றி. கோகுல், விஜய் என அனைவரும் நண்பர்கள். இவர்கள் எனக்கு நண்பர்களாக கிடைத்தது பெரிய பாக்கியம். இவர்கள் எனக்கு நண்பர்களாக கிடைப்பதற்கு இயக்குநர் அருண்குமார் தான் காரணம், அவருக்கும் நன்றி. படம் பத்தாவது நாளை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதற்கு ஒத்துழைத்த வெரூஸ் நிறுவனத்தாருக்கு நன்றி. பேச்சி இன்று மிகப்பெரிய வெற்றி படமானதற்கு ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனமும் ஒரு காரணம், எஸ்.ஆர்.பிரபு சார் மற்றும் குகன் ஆகியோருக்கும் நன்றி என்றார்.
 
படத்தின் தயாரிப்பாளர் கோகுல் பினாய் பேசுகையில்.....
 
இந்த நிகழ்ச்சி பேச்சி படத்தின் வெற்றி விழாவாகவும், நன்றி தெரிவிக்கும் விழாவாகவும் நடக்கிறது. ஆகஸ்ட் 1 ஆம் தேதி திரையிடப்பட்ட பேச்சி சிறப்பு காட்சியின் போதே படத்தின் வெற்றி நிச்சயிக்கப்பட்டு விட்டது. இந்த படத்தின் புரோமோஷனுக்காக ஒரு சிறிய பட்ஜெட் ஒதுக்கினோம். ஆனால், அதை தாண்டி மாஸாக படம் ரீச் ஆனால் மட்டும் தான் வெற்றி கிடைக்கும் என்ற போதில் அதை எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி செய்த பத்திரிகையாளர்களுக்கு நன்றி. 
 
படப்பிடிப்பு முடிந்த பிறகு, பின்னணி வேலைகள் தொடங்கிய போது எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்த வெரூஸ் நிறுவனத்தாருக்கு நன்றி. பேச்சியாக நடித்த சீனிபாட்டிக்கு நன்றி, அவரை நான் இப்போது தான் பார்க்கிறேன். படம் வெளியாகும் போது நிறைய தியேட்டர்களில் வெளியாக வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். 
 
ஆனால், ட்ரீம் வாரியர்ஸ் குகன் சார், இந்த படத்திற்கு இப்படி தான் போக வேண்டும் என்று மதிப்பீடு வைத்திருக்கிறார்கள், அந்த மதிப்பீடு மிக சரியாக இருந்தது. தயாரிப்பாளருக்கு எந்த வகையிலும் இழப்பு வரக்கூடாது என்பதை மனதில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு கட்டமாக எங்களை அழைத்துச் சென்றார்கள், அவர்களுக்கு நன்றி.
 
படத்திற்கு பி.ஆர்.ஓவாக பணியாற்றிய சுரேஷ் மற்றும் தர்மா ஆகியோருக்கு நன்றி. பேச்சி படத்தின் இரண்டாம் பாகம் கேட்கிறார்கள், வெரூஸ் நிறுவனத்துடன் மீண்டும் ஒரு படம் பண்ண போகிறோம், இதற்கு அனைத்துக்கும் நீங்கள் தான் காரணம், உங்கள் அனைவருக்கும் நன்றி என்றார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தங்கலான் படத்திற்கு சிக்கலா.? ரூ.1 கோடி டெபாசிட் செய்ய தயாரிப்பாளருக்கு பறந்து உத்தரவு.!