தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய உதவி செய்த நடிகர் – அஜித் ஸ்டைலை பாலோ செய்யும் பவர்ஸ்டார்!

Webdunia
சனி, 15 ஆகஸ்ட் 2020 (09:45 IST)
நடிகர் அஜித்தைப் போல தயாரிப்பாளர் ஏ எம் ரத்னத்துக்கு உதவி செய்ய ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் பவர் ஸ்டார் பவன் கல்யாண்.

அஜித் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வேதாளம் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அஜித்தின் சினிமா கேரியரில் மிக அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக அமைந்தது. இந்த படத்தில் அஜித் கணேஷ் மற்றும் வேதாளம் என இரு மாறுபட்ட தோற்றங்களில் நடித்திருந்தார். இந்த படத்தை ஒரு காலத்தில் பிரம்மாண்ட படங்களின் தயாரிப்பாளராக இருந்து நொடித்துப் போன ஏ எம் ரத்னம் தயாரித்திருந்தார். அவருக்கு உதவி செய்யும் பொருட்டு அஜித் அவருக்காக வரிசையாக இரண்டு படங்களை நடித்துக் கொடுத்தார்,

அந்த வகையில் இப்போது தெலுங்கு நடிகரான பவன் கல்யாணும் தனது குஷி படத்தின் தயாரிப்பாளரான ஏ எம் ரத்னத்துக்கு உதவி செய்ய வேதாளம் படத்தின் ரீமேக்கில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல், தயாரிப்பாளரின் பொருளாதார சுமையைக் குறைக்கும் பொருட்டு படம் முடிந்த பின்னர் சம்பளம் வாங்கிக் கொள்வதாக சொல்லி இன்ப அதிர்ச்சி அளித்துள்ளாராம்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எழுச்சி அடைந்த எதிர்நீச்சல்.. சிங்கப்பெண்ணுக்கு சறுக்கல்.. சிறகடிக்க ஆசைக்கு என்ன ஆச்சு.. டிஆர்பி தகவல்..!

ராஷி கண்ணாவின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல்!

கலர்ஃபுல் உடையில் கவர்ந்திழுக்கும் கீர்த்தி சுரேஷ்… க்யூட் ஆல்பம்!

இரண்டு வாரத்தில் 700 கோடி ரூபாய் வசூல்… அசத்திய காந்தாரா 1!

சூர்யா பட இயக்குனரோடு கைகோர்க்கும் விஜய் தேவரகொண்டா!

அடுத்த கட்டுரையில்
Show comments