மக்களவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ள பவர் ஸ்டார் பவண் கல்யாண் இனி சினிமாவுக்கு திரும்ப வாய்ப்பில்லை என அறிவித்துள்ளார்.
தெலுங்கு சினிமாவில் பவர் ஸ்டார் என அழைக்கப்படும் பவன் கல்யாண். சூப்பர் ஹிட் படங்களைக்கொடுத்த நடிகர். அதுமட்டுமல்லாமல் தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர், இயக்குநர், அரசியல்வாதி என பலமுகங்களைக் கொண்டவர் பவன் கல்யாண். இதுவரை 25 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஆந்திராவில் மிகப்பெரிய மாஸ் ஹீரோவான இவர் அரசியலில் இறங்கினார்.
மக்களவைத் தேர்தல் மற்றும் ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் தனது ஜன சேனா கட்சி சார்பில் போட்டியிட்டார். மேலும் .அவரே இரு தொகுதிகளில் போட்டியிட்டார். ஆனால் எதிர்பாராத விதமாக அவர் தோல்வியைத் தழுவினார். அதனால் அரசியலில் பவன் கல்யாணும் அரசியலில் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் மீண்டு அவர் தனது ரசிகர்களை குஷிபடுத்த சினிமா கோதாவில் குதிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகின.
ஆனால் இதை பவன் கல்யாண் தரப்பு மறுத்துள்ளது. அவரின் நெருங்கிய நண்பரான பந்த்லா கணேஷ் தனது ‘நான் ஒரு திரைக்கதையோடு பவன் கல்யாணை அனுகினேன். ஆனால் அவர் அதை நிராகரித்துவிட்டார். அதனால் ஆவர் இப்போது சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் இல்லை’ எனத் தெரிவித்துள்ளார்.