நடிகர்களின் ரசிகர் மன்றங்கள் குண்டர்கள் மன்றமா மாறிடுச்சு: பார்வதி ஆவேசம்

Webdunia
சனி, 20 அக்டோபர் 2018 (12:42 IST)
பிரபல மலையாள திரைப்பட நடிகை பார்வதி. இவர்  தமிழில் பூ, மரியான், சென்னையில் ஒருநாள், உத்தம வில்லன் ஆகிய படங்களில் நடித்துள்ளளார்.


இவர் நடிகை கடத்தல் வழக்கில் சிக்கிய திலீப்பை கடுமையாக விமர்சித்து வருகிறார்.  மேலும் மலையாள நடிகர் சங்கமான அம்மாவில் திலீப்பை சேர்த்ததுக்காக மோகன்லாலையும் கண்டித்தார். இதனால் பார்வதியை  சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வசைபாடி வருகிறார்கள். இதனால் வருத்தத்தில் இருக்கும் பார்வதி கூறியதாவது:
 
“மலையாள திரைப்பட பெண்கள் கூட்டமைப்பை உருவாக்கியதுக்காக  எனக்கும், இதில் உள்ளமற்ற நடிகைகளுக்கும் புதிய படங்களில் நடிக்க வாய்ப்பு தராமல் ஒதுக்குகிறார்கள். இந்தி பட உலகில் மீ டூவில் பாலியல் புகார் கூறிவரும் நடிகைகளுக்கு படவாய்ப்புகள் அளிக்கிறார்கள்.  ஆனால் கேரளாவில் எங்களை ஒதுக்குகிறார்கள். இங்கு கதாநாயகர்களை கடவுளாக பார்க்கிறார்கள். நடிகர்களின் ரசிகர் மன்றங்கள் குண்டர்கள் மன்றமாக மாறியுள்ளது.
 
அவர்கள் சமூக வலைத்தளங்களில் எனக்கும் மற்ற நடிகைகளுக்கும் கொலை மிரட்டல், பாலியல் மிரட்டல்கள் விடுக்கின்றனர். எங்கள் வீடுகள் தீ வைத்து கொளுத்தப்படலாம் என்று அஞ்சுகிறோம். தினமும் பயத்திலேயே இருக்கிறோம். நிறைய வெற்றி படங்களில் நடித்துள்ள எனக்கு ஒரு வருடமாக படங்கள் இல்லை.”
 
இவ்வாறு பார்வதி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாஸ்க் படத்தின் சிலக் காட்சிகளை இயக்கியதே வெற்றிமாறன்தானா?... தீயாய்ப் பரவும் தகவல்!

தனுஷை நம்பி 500 கோடி ரூபாய் முதலீடு செய்யும் தயாரிப்பாளர்… அடுத்தடுத்து மூன்று படங்கள்!

23 ஆண்டுகளுக்குப் பிறகு புதுமுக இயக்குனருக்கு விக்ரம் கொடுத்த வாய்ப்பு… யார் இந்த போடி ராஜ்குமார்…?

இயக்குனருக்கு செட்டில்மெண்ட்… மகுடம் பட பிரச்சனையைத் தீர்த்த விஷால் & கோ!

எந்த அப்டேட்டும் வேண்டாம் சார்… ரஜினிக்கு நெல்சன் வைத்த கோரிக்கை… பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்