Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பருத்திவீரன் அப்பத்தா மரணம்… கார்த்தி இரங்கல்!

Advertiesment
பருத்திவீரன் அப்பத்தா மரணம்… கார்த்தி இரங்கல்!
, வெள்ளி, 7 மே 2021 (15:50 IST)
பருத்திவீரன் படத்தின் கார்த்தியின் அப்பத்தாவாக நடித்த பஞ்சவர்ணம் அம்மாள் உயிரிழந்துள்ளார்.

2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 ஆம் தேதி கார்த்தி நடிகராக அறிமுகமான பருத்தி வீரன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. சிவாஜி கணேசனுக்கு பிறகு முதல் படத்திலேயே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நாயகனாக கார்த்தி மாறினார். இந்த படத்தில் நடித்ததற்காக பிரியா மணிக்கு தேசிய விருது கிடைத்தது. இந்த படத்தைப் பார்த்து பிரமித்துப் போன பாரதிராஜா ‘என்னை எல்லோரும் கிராமிய இயக்குனர் என்கின்றனர். ஆனால் என்னால் இப்படி ஒரு படத்தை எடுக்க முடியவில்லையே என நான் ஆதங்கப்பட்டேன்’ எனக் கூறி பாராட்டினார்.

அந்த படத்தில் நடித்த அனைத்துக் கதாபாத்திரங்களுமே ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன. அப்படி ஒரு கதாபாத்திரம்தான் கார்த்தியின் பாட்டியாக நடித்த பஞ்சவர்ணம் அம்மாளின் கதாபாத்திரம். அவர் இப்போது உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இதை தனது சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ள கார்த்தி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய்க்கு சம்பளம் இவ்வளவா? வாயடைக்க வைத்த தெலுங்கு தயாரிப்பாளர்!