Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கன்னிச்சாமியாக திரும்பிவரும் சரவணன்

கன்னிச்சாமியாக திரும்பிவரும் சரவணன்
, புதன், 19 அக்டோபர் 2016 (18:19 IST)
பருத்தி வீரன் சரவணன் மீண்டும் கன்னிச்சாமி மூலம் ஹீரோவாக நடித்துள்ளார்.
 

 


ஹீரோவாக நடித்து வந்த சரவணன் பருத்தி வீரன் படத்தில் சித்தப்பாவாக நடித்து 
தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். இப்போது மூன்றாவது இன்னிங்ஸை மீண்டும் ஹீரோவாக ஆரம்பித்துள்ளார். அவர் நாயகனாக நடிக்க கன்னிச்சாமி என்ற படம் திரைக்கு வருகிறது. 
 
ஐயப்பனின் மகிமையைச் சொல்லும் இந்தப் படத்தில் சரவணனும், அர்ச்சனா சிங்கும் கணவன், மனைவியாக வருகிறார்கள். இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு பிரிந்துவிட, அவர்களின் மகன் கன்னிச்சாமியாக சபரிமலை சென்று ஐயப்பன் அருளில் பிரிந்த அப்பா, அம்மாவை ஒன்று சேர்ப்பதுதான் கதை. 
 
டிசம்பரில் ஐயப்ப சாமிகளின் சீசன் தொடங்கும். அதனை குறிவைத்து இந்தப் படத்தை எடுத்துள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரெமோவாக மாறிய ரோபோ சங்கர்