Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சர்கார் கதை விவகாரம் - இப்படி கலாய்க்கலாமா பார்த்திபன்?

Advertiesment
சர்கார் கதை விவகாரம் - இப்படி கலாய்க்கலாமா பார்த்திபன்?
, செவ்வாய், 30 அக்டோபர் 2018 (16:09 IST)
சார்கார் பட விவகாரம் பூதாகரம் ஆனதை தொடர்ந்து இயக்குனரும், நடிகருமான பார்த்திபன்  கிண்டலான கருத்தை தெரிவித்துள்ளார்.

 
விஜய் நடிப்பில், முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள சர்கார் கதை  வருண் ராஜேந்திரனுடையதுதான் எனவும், படத்தின் டைட்டில் கார்டில் வருண் ராஜேந்திரன் பெயரை போடுவதற்கு முருகதாஸ் நீதிமன்றத்தில் ஒத்துக்கொண்டதாகவும் செய்திகள் வெளியானது. எனவே, முருகதாஸ் கதையை திருடி எடுத்துவிட்டார் என சமூக வலைத்தளங்களில் அவருக்கு எதிராக பதிவுகளும், மீம்ஸ்களும் பரவி வருகிறது.
 
ஆனால், டைட்டில்லாம் பேருலாம் போடமாட்டோம். என் கதையை போலவே அவரும் கதையை வைத்திருந்தால், அவருக்கு மரியாதை செய்வோம் என முருகதாஸ் விளக்கம் அளித்துள்ளார்.
 
இந்நிலையில், நடிகர் பார்த்திபன் தனது டிவிட்டர் பக்கத்தில் “ kTVI film without a STORY 'கதை' இருந்தா தானே பிரச்சனை?” என பதிவிட்டுள்ளார்.
webdunia

 
அதாவது, தான் இயக்கி வெற்றி பெற்ற ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் கதை கிடையாது எனவும், கதை இருந்திருந்தால் பஞ்சாயத்து வந்திருக்கும் என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

70 வயது பாட்டியாக நடிக்கும் சமந்தா " மிஸ் கிராணி "