Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இனி வாழ்நாளில் உங்கள் விருதே வேண்டாம் - விகடன் விருதை உதாசீனப்படுத்திய பார்த்தீபன்!

Advertiesment
இனி வாழ்நாளில் உங்கள் விருதே வேண்டாம் - விகடன் விருதை உதாசீனப்படுத்திய பார்த்தீபன்!
, திங்கள், 13 ஜனவரி 2020 (10:11 IST)
திரைத்துறையில் திறமை வாய்ந்த கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கவரவிப்பது வழக்கம். 2019ம் ஆண்டின் சிறந்த கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு மீடியாக்கள் விருதுகள் வழங்கி வருகிறது. அந்தவகையில் சமீபத்தில் விகடன் விருதுகள் விழாவில்  தனக்கு விருது கிடைக்கவில்லை என்பதால் இனி அவர்கள் கொடுக்கும் எந்த விருதையும் வாங்க மாட்டேன் என நடிகர் பார்த்தீபன் மேடையிலே கூறியுள்ளார். 
 
இந்த வருடம் ஆரம்பத்திலிருந்தே விஸ்வாசம், பேட்டை, கைதி , அசூரன் என யாரும் எதிர்பார்க்கதவகையில் ஒன்றுக்கொன்று போட்டி போட்டு மக்கள் மனதை வென்று ஹிட் அடித்தது. அதற்கான விருதுகளை கொடுத்து கவுரவித்து விகடன் பார்த்திபனின் ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திற்கு விருது கொடுக்கவில்லை. ஆனால், ஸ்பெஷல் மென்ஷன் என்று ஒரு ஆறுதல் விருதை பார்த்திபனுக்கு வழங்கினார்கள்.
 
இதனால் கடுப்பான பார்த்திபன் மேடையிலேயே... என் திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு Eligible லிஸ்டில் இருக்கிறது அப்படியிருக்க விகடன் விருது எனக்கு கொடுக்கவில்லை என்பதை கோபமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விருது வழங்குபவர்களை விட ரசிகர்களுக்கு ரசணை அதிகம் – இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் கருத்து !