Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பார்த்திபனின் அடுத்த படம் பிராமின் - முஸ்லீம் கதையா?

பார்த்திபனின் அடுத்த படம் பிராமின் - முஸ்லீம் கதையா?
, வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (07:55 IST)
இயக்குனர் நடிகர் பார்த்திபனின் ’ஒத்த செருப்’ திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் ’இரவின் மடியில்’ என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளை அவர் கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது படத்தில் நடிக்க புதுமுக நடிகர் நடிகைகள் தேவை என விளம்பரம் செய்துள்ளார். அதில் ஐம்பது வயது மதிக்கத்தக்க பிராமின் லுக் உடைய ஆண்கள் தேவை என்றும் அதேபோல் 50 வயது மதிக்கத்தக்க முஸ்லிம் லுக் உடைய ஆண்கள் தேவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
 
அதுமட்டுமின்றி 5 முதல் 28 வயது வரை மற்ற அனைத்து வயது உடைய நடிகர் நடிகைகளும் இந்த படத்திற்காக தேவைப்படுகிறார்கள் என்றும் விருப்பமுள்ளவர்கள் தன்னுடைய இமெயிலுக்கு தன்னை தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் தொலைபேசி எண்ணையும் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்
 
இந்த விளம்பரத்தில் அவர் பிராமின் மற்றும் முஸ்லிம் லுக் உடைய நடிகர்கள் தேவை என்று அவர் குறிப்பிட்டுள்ளதை அடுத்து இந்த படத்தின் கதை பிராமின் மற்றும் முஸ்லிம் சம்பந்தப்பட்ட கதையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது
webdunia
பார்த்திபனின் அடுத்த படம் பிராமின் - முஸ்லீம் கதையா?

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் சிம்புவின் மாநாடு படத்தைப் பாராட்டிய எஸ்.ஏ.சி