மீண்டும் தொடங்கும் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்தின் ஷூட்டிங்!

vinoth
திங்கள், 9 ஜூன் 2025 (08:28 IST)
சிவகார்த்திகேயன், ரவி மோகன் மற்றும் அதர்வா ஆகியோர் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் டான் பிக்சர்ஸ் சார்பில் ‘பராசக்தி’ திரைப்படம் உருவாகி வருகிறது.  முதலில் தமிழ்நாட்டின் பல இடங்களில் நடந்த படப்பிடிப்பு கடைசியாக இலங்கையில்படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்தது. ‘பராசக்தி’ திரைப்படம் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தோடு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸாகும்  என அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இல்லத்தில் அமலாக்கத்துறையின் சோதனையிட்ட நிலையில் அவர் தற்போது தலைமறைவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் அவர் தயாரிக்கும் படங்களின் பணிகள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டது. அதிலும் குறிப்பாக இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகும் ‘பராசக்தி’ திரைப்படம் முடக்கப்படலாம் என சொல்லப்பட்டது.

ஆனால் படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா ‘பராசக்தி படத்துக்கு அமலாக்கதுறை சோதனையால் எந்த பாதிப்பும் இல்லை. சிவகார்த்திகேயன் தற்போது மதராஸி படத்தின் ஷூட்டிங்குக்காக இலங்கையில் உள்ளார். அவர் வந்ததும் மீண்டும் ஷூட்டிங் தொடங்கும்” எனக் கூறியிருந்தார். அதன்படி தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் இரண்டு வாரங்களில் தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

Thalaivar 173: சுந்தர்.சிக்கு டபுள் சேலரி!.. ரஜினி படத்தின் மொத்த பட்ஜெட் இவ்வளவு கோடியா?..

விஜயின் பாடும் கடைசி பாடல்.. ‘ஜனநாயகனின்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்படி வந்துருக்கு தெரியுமா?

SSMB29: ராஜமௌலி - மகேஷ்பாபு படத்தில் வில்லனாக பிருத்திவிராஜ்!.. போஸ்டரே டெரரா இருக்கே!..

சுந்தர்.சியின் திரையுலக பயணம்.. ரஜினி 173ல் எப்படி வொர்க் அவுட் ஆகப் போகிறது?

ஜர்னலிசத்தை சாக்கடைக்கு கொண்டு செல்கிறார்கள்! - கவுரி கிஷன் விவகாரத்தில் குஷ்பூ ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments